பேச்சு:இலங்கை சனாதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:00, 14 மே 2007 (UTC)

பெயர்மாற்றம்[தொகு]

இலங்கை அதிபர் எனவே இருக்கலாமே? சனாதிபதி என்பது தமிழில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 28 அக்டோபர் 2015 (UTC)

இலங்கையில் சனாதிபதி என்றே உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. அதிபர் என்ற சொல் principal என்ற பொருளில் (பெரும்பாலும் பாடசாலைகளிலேயே) பயன்படுத்தப்படுகிறது. எனவே, மாற்ற வேண்டாம்.--பாஹிம் (பேச்சு) 17:36, 28 அக்டோபர் 2015 (UTC)

ஒரு சொல் இரு பொருள்களில் வழங்குவது தமிழ் இயல்பு தான். அமெரிக்க சனாதிபதியை அதிபர் என அழைப்பது பரவலான வழக்கத்தில் உள்ளது தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:55, 28 அக்டோபர் 2015 (UTC)

அலுவலக அளவிலும் அதிபர் என்று தான் அழைக்கிறார்கள் இலங்கையில். [1]

இலங்கையில் உத்தியோகபூர்வமாக அதிபர் என்ற சொல் பாடசாலைகளின் தலைமை ஆசிரியர்களைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மேலே கொடுத்த இணைப்பும் அதையே குறிக்கிறது. Sri Lanka Principal Service (இலங்கை அதிபர் சேவை) என்பதில் அதிபர் என்றால் சனாதிபதியல்ல.--பாஹிம் (பேச்சு) 18:23, 28 அக்டோபர் 2015 (UTC)

ஜனாதிபதி என்பதே மக்களின் அதிபதி (அதிபர்) என்று தான் பொருள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:59, 28 அக்டோபர் 2015 (UTC)

இலங்கையில் அதிபர் என்ற சொல் வேறு பொதுவான பயன்பாட்டில் உள்ளதால் அதனைப் பயன்படுத்த முடியாது. அரசுத் தலைவர் (president) எனலாம்.--Kanags \உரையாடுக 20:00, 28 அக்டோபர் 2015 (UTC)