பேச்சு:இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எந்த கட்சி ஆண்டாலும் அது அரசு தானே? கட்சியின் பெயரை அடைப்புக்குறிக்குள் தர வேண்டுமா? கட்டுரைத் தலைப்பை சுருக்க ஏதேனும் வழி இருக்கிறதா?--ரவி 21:33, 28 அக்டோபர் 2006 (UTC)

கட்சி பெயர் விளக்கத்துக்கு தேவை, கணக்குக்கும் தேவை. --Natkeeran 21:45, 28 அக்டோபர் 2006 (UTC)

இ.சு.க தலைமையிலான இலங்கை அரசு என்று குறிப்பிடலாம். பொதுவாக இப்படி குறிப்பிடுவது தான் வழக்கம். (எடுத்துக்காட்டுக்கு, காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான இந்திய அரசு..)..ஆனால், அரசு என்னும் சொல்லுக்கு அடுத்து அடைப்புக்குறிக்குள் கட்சியை குறிப்பிட்டால், இன்னும் பல கட்சிகள் கூட ஒரே நேரத்தில் அரசு நடத்துவது போல் இருக்கிறது. பிறரின் கருத்தையும் எதிர்ப்பார்க்கிறேன். இலங்கை அரசு - விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று என்று கட்டுரைத் தலைப்பை வைக்கலாமா? கட்டுரைக்குள் எந்தக் கட்சி தலைமையிலான அரசு என்று குறிப்பிடலாம்--ரவி 21:53, 28 அக்டோபர் 2006 (UTC)

இங் இ.சு.க. என்பது தேவையற்றது. இசுக இலங்கையின் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட "அரசு" என்ற வகையிலேயே பேச்சுக்களில் பங்கு கொள்கிறது. இ.சு.க. என குறிப்பதன் மூலம் நடுவு நிலைமை பற்றிய கேள்வி எழுகிறது. கட்டுரயில் ரவி கூறியது போல இ.சு.க தலைமையிலான இலங்கை அரசு என குறிக்கலாம்--டெரன்ஸ் \பேச்சு 02:29, 29 அக்டோபர் 2006 (UTC)

டெரன்ஸ் நானும் நீங்கள் கூறிய்வற்றில் சில கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன் பேசுவது இலங்கை அரசு என்பதே கூடுதல் பொருத்தமானது. தவிர இ.சு.க முன்னெடுப்பு என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. இப்போதைய அரசு பதவிக்கு வந்து 1 வருடமாகிய நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆமைவேகத்தில் புலிகளுடன் பேச்சு நடத்துவதாக் கூறியே ஆட்சிக்கு வந்தவர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் செய்திருந்தால் முன்னெடுப்பு என்பது பொருத்தமாக இருக்கலாம். இப்போதைய பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்களான நோர்வே அரசாங்கமே காரணம் எனவே வேண்டுமானால் நோர்வே முன்னெடுப்புடனான இலங்கை அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை என்றவாறு தலைப்பை எழுதினால தலைப்பு பெரிதாகும் பின்னாளில் தேடுபொறிப்பயனர்களுக்கும் சிரமாக அமையும். --Umapathy 07:08, 29 அக்டோபர் 2006 (UTC)

நிச்சயம், நார்வேயின் பங்களிப்பை கட்டுரையில் தகுந்த இடத்தில் குறிப்பிடலாம். தலைப்பில் தவிர்க்கலாம். கட்டுரைத் துவக்கத்திலும் தவிர்க்கலாம். எனக்கென்னவோ, அது ஒரு நாட்டு அரசுக்கான தகுந்த மதிப்பை தருவது போல் இல்லை.--ரவி 08:22, 29 அக்டோபர் 2006 (UTC)

முதல் சுற்றா இரண்டாம் சுற்றா?[தொகு]

கட்டுரைத் தலைப்பு இரண்டாம் சுற்று என்றும் உள்ளடக்கம் முதல் சுற்று என்றும் சொல்கிறது..எது சரி?--ரவி 21:36, 28 அக்டோபர் 2006 (UTC)

ஜெனிவா சுற்று 2. முதல் சுற்று பெப்ரவரியில் நடைபெற்றது. --Natkeeran 21:45, 28 அக்டோபர் 2006 (UTC)

கட்டுரையில் மாற்றங்களை செய்துள்ளேன்--ரவி 21:53, 28 அக்டோபர் 2006 (UTC)

தலைப்பு சுருக்கமாக இருப்பது விரும்பத்தக்கது. இலங்கை அரசுடன்தான் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. சுதந்திரக் கட்சியுடன் அல்ல. அத்துடன், இப்பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பினரும் (பேரியல் அஷ்ரஃப் கட்சி) அரசு சார்பில் கலந்து கொள்ளுகிறது. எனவே தலைப்பு பின்வருமாறு இருக்கலாம்:

இலங்கை அரசு - விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை 2006, இரண்டாம் சுற்று--Kanags 03:36, 29 அக்டோபர் 2006 (UTC)