பேச்சு:இலங்கையில் பாடசாலைச் சீருடைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் அரச துறை, பொதுத் துறை என்ற பிரிப்பு துல்லியமாயில்லை. பொதுவாக அரச பாடசாலை எனப் பயன்படுத்துவது போலவே என் சிற்றறிவுக்குப் படுகின்றது. மற்றவர்களின் கருத்தறிய விருப்பம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 00:00, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறு செய்யலாம். தனியார் பாடசாலைச் சீருடைகள் பற்றிய கட்டுரையில் ஒரு பந்தியில் குறிப்பிடலாம்.--Anton (பேச்சு) 02:50, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இலங்கையின் அரசாங்கப் பாடசாலைகளிலும் பெரும்பாலும் மாணவிகளின் சீருடை சில இடங்களில் மாறுபடுகின்றது. எடுத்துக் காட்டாக, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை இராமநாதன் மகளிர் கல்லூரி, கறுவாத் தோடம் புனித பிரிஜட்சு கல்லூரி, விசாக்கா கல்லூரி என்பவற்றின் சீருடைகள் பெரிதும் வேறுபாடானவை. முஸ்லிம் மாணவிகளின் பர்தாவிலும் இடத்துக்கிடம் வேறுபாடு உள்ளது.--பாஹிம் (பேச்சு) 03:16, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கொழும்பிலுள்ள பன்னாட்டு பாடசாலைகளின் சீருடைகளிலும் மாற்றம் உள்ளதல்லவா? --Anton (பேச்சு) 03:26, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆம், நிச்சயமாக. கொழும்பில் மாத்திரமல்ல, ஏனைய பிரதேசங்களிலும் சீருடைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 03:33, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]