பேச்சு:இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது போன்ற தலைப்புகளில் இங்கு கட்டுரைகளை இயற்றுவதை விட விக்கி செய்திகளில் விரிவாக இயற்றினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். இதே போல, பிற நிகழ்வுகள் தொடர்பான செய்திகளையும் விக்கிச்செய்திகளிலும் இற்றைப்படுத்தி வரலாம் వినోద్  வினோத் 02:48, 7 மார்ச் 2008 (UTC)

அப்படி உருவாக்கினாலும் தயவு செய்து பெயரிடல் மரபுவழி தலைப்பை மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை, 2008 என வையுங்கள். செய்தியாகப் பதியும்போது '|' கொண்டு விரிவாகத் தாருங்கள். -- சுந்தர் \பேச்சு 04:09, 7 மார்ச் 2008 (UTC)
இந்தக் கட்டுரை ஒரு செய்திக் கட்டுரையாக கருதலாம். எப்பிடி ஒரு நூல் பற்றிய தகவல் தரப்படலாமோ, அப்ப்டியே அறிக்கைகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்படவேண்டும். இப்படியான அறிக்கைகள் சமூகத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. பெயர் இடுவது சற்று சிக்கலே. இந்த அறிக்கை 2008 ஆண்டுக்கான அறிக்கை இல்லை. அறிக்கையின் உள்ளடக்கத்தை தலைப்பில் சுட்ட வேண்டும். --Natkeeran 23:08, 7 மார்ச் 2008 (UTC)
இக்கட்டுரை எழுதப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, நற்கீரன். ஆனால் அறிக்கையின் உள்ளடக்கத்தை தலைப்பில் சுட்ட வேண்டும் என்பதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. கலைக்களஞ்சியத்திற்கு ஒரு பெயரிடல் மரபு உள்ளதல்லவா? செய்திக்கட்டுரையே ஆனாலும் தலைப்பில் உள்ளடக்கத்தைத் தருவது பொருத்தமல்ல. 'மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை, 2006-2008' என்று பெயரிடலாமே. -- சுந்தர் \பேச்சு 03:57, 8 மார்ச் 2008 (UTC)


ஒரு ஆண்டில் பல அறிக்கைகளை ம.உ.க வெளியிடுகின்றது. எனவே எவ்வாறு குறிப்பாக சுட்டுவது என்பது சற்று சிக்கலே. தலைப்பில் உள்ளடக்கத்தை சுட்டுவதில் என்ன தவறு என்று புரியவில்லை. --Natkeeran 04:04, 8 மார்ச் 2008 (UTC)
மன்னிக்கவும். உள்ளடக்கத்தைச் சுட்டுவதில் தவறில்லை. முழு உள்ளடக்கத்தையும் தர வேண்டாம் என்று கூற எண்ணி அவ்வாறு தவறுதலாகக் கூறிவிட்டேன். கீழே கனகு தந்துள்ள தலைப்பு எனக்கு ஏற்புடையது. -- சுந்தர் \பேச்சு 06:11, 8 மார்ச் 2008 (UTC)
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008 அல்லது இதனோடு ஒத்த கருத்தில் தலைப்பிடலாம் என்பது என் ஆலோசனை. (Human Rights Watch - மனித உரிமைகள் கண்காணிப்பகம்) --Kanags \பேச்சு 04:12, 8 மார்ச் 2008 (UTC)