உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிபெயர்ப்பு

[தொகு]

இத்தகைய கட்டுரைகளில் Protected என்பதை பாதுகாக்கப்பட்ட என்று மொழிபெயர்க்காமல் பாதுகாக்கப்படும் என்று மொழிபெயர்க்க வேண்டும். தமிழில் பாதுகாக்கப்பட்ட என்பது இறந்த காலச் சொல். அஃதாவது, ஒரு இடத்தை இப்போது பாதுகாப்பதில்லை, அது முன்னர் பாதுகாக்கப்பட்டது என்று பொருளேற்படும். இங்கே ஆங்கிலத்திலும் Protected என்ற சொல் இறந்த காலச் சொல்லன்று.--பாஹிம் (பேச்சு) 13:11, 19 ஏப்ரல் 2016 (UTC)

ஆங்கிலத்தைப் போலவே பாதுகாக்கப்பட்ட என்பது எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடிய சொல். நீங்கள் கூறுவது ஏற்புடையதல்ல.--Kanags \உரையாடுக 03:51, 30 ஏப்ரல் 2016 (UTC)

எப்படி? இறந்தகாலச் சொல்லாகவா?--பாஹிம் (பேச்சு) 04:44, 30 ஏப்ரல் 2016 (UTC)

இல்லை, எப்போதும்.--Kanags \உரையாடுக 04:59, 30 ஏப்ரல் 2016 (UTC)

எந்த ஆதாரத்தினடிப்படையில் அப்படிக் கூறுகிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 05:01, 30 ஏப்ரல் 2016 (UTC)