உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kanags ஒரு சிறிய ஆலோசனை இலங்கை உள்ளூராட்சி சபை என புதிய பகுப்பை இடலாமே. இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உபதலைப்பாக வந்தால் சிறப்பாக இருக்கும். இலங்கை உள்ளூராட்சி சபையில் இன்னும் பல விடயங்களுள.--P.M.Puniyameen 12:25, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அப்படியானால் இதனை இரண்டு கட்டுரைகளாகப் பிரிக்கலாமா? இலங்கை உள்ளூராட்சி சபைகள், இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என இரண்டு கட்டுரைகளாக எழுதுவதற்கு உங்களிடம் தகவல்கள் உள்ளனவா?--Kanags \உரையாடுக 12:31, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]
எதற்கும் தொடர்ந்து எழுதுங்கள். கட்டுரையின் அளவைக் கொண்டு இரண்டாகப் பிரிக்கலாம்.--Kanags \உரையாடுக 12:37, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

4 கட்டுரைகள் ஆயத்த நிலையில் உள்ளன Kanags . 1 நகரசபைகள், 2 மாநகரசபைகள், 3 பிரதேச சபைகள், 4 மாகாணசபைகள். ஏற்கெனவே எழுதப்பட்ட பிரதேச செயலகமும் இலங்கை உள்ளூராட்சி சபை பிரிலிலே அடங்கும்--P.M.Puniyameen 12:50, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மாற்றமிடுவதாயின் இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகள் என மாற்றமிடலாம்--P.M.Puniyameen 12:55, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]
பிரதேச செயலகம் என்பது பிரதேச சபைகளா? பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை) என்பது பிரதேச செயலகங்களா அல்லது பிரதேச சபைகளா? அல்லது இரண்டும் ஒன்று தானா?--Kanags \உரையாடுக 13:07, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக (A.G.A.Division) இருந்த நிறுவனங்கள் பிரதேச செயலகங்களாக மாற்றியமைக்கப்படடன. பிரதேச சபைகள் வேறு பிரதேச செயலகம் வேறு--P.M.Puniyameen 13:35, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை) என்பதை பிரதேசச் செயலக பிரிவு (இலங்கை) என மாற்றியமைக்கலாம். பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதும் பிழையல்ல. பிரதேசச் செயலாளர் பிரிவும் பிரதேசச் செயலகமும் ஒன்றே--P.M.Puniyameen 13:41, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]