பேச்சு:இறபீக் சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சிறு விளக்கம்[தொகு]

அறபு மொழிப் பெயர்களை எழுதும் போது றகரமே பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே அறபு மொழி ஒலிப்புக்கு நெருங்கியது. இங்கே கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பவர் றபீக் ஷாமீ ஆவார். ஷாம் பகுதியைச் சேர்ந்த றபீக் என்று பொருள். கட்டுரையாளர் முன்னொட்டாக இ சேர்த்துள்ளார். இறபீக்கு என்று எழுதினால் பெயர் சிதையுமல்லவா.--பாஹிம் (பேச்சு) 03:28, 8 நவம்பர் 2015 (UTC)

பாஹிம் எனக்கும் பெயர்களைச் சிதைப்பதில் துளியும் உடன்பாடு இல்லை. நான் றபிக் ஷாமி என்றே எழுத நினைத்தேன். விக்கிக் கொள்கைகளுக்கு இத்தலைப்பு பொருந்தாது என்று நினைத்தே இரபிக் என எழுதினேன். இ யை நீக்குவது பொருத்தமாக இருக்குமானால் நீக்கி விடுங்கள். நன்றி. --Chandravathanaa (பேச்சு) 07:53, 8 நவம்பர் 2015 (UTC)

//இறபீக்கு என்று எழுதினால் பெயர் சிதையுமல்லவா// அறபிச் சொற்களுக்கு தமிழ் இலக்கணம் பார்க்கத் தேவையில்லையா?--Kanags \உரையாடுக 08:09, 8 நவம்பர் 2015 (UTC)

யை நீக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. நான் முன்னரும் வேற்று மொழிச் சொற்கள் பற்றிய எனது கருத்தைத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். வேற்றுமொழிச் சொற்களில் தமிழ் உச்சரிப்புக்குப் பொருந்தி வரக்கூடிய இடங்களைத் தவிர மற்றெல்லா இடங்களிலும் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை. பெற்றோர் என்று தமிழ்ச் சொல்லிருக்கிறது. பெற்றோல் என்றால் பிழையென்கிறீர்கள் நீங்கள். கடைசியெழுத்து மட்டுமே மேற்படி சொற்களில் மாறுபடுகிறது. நானோ பெட்ரோல் என்று கிஞ்சித்தும் பொருத்தமில்லாமல் எழுதுவதைத்தான் பிழையென்கிறேன். நான் ஒருபோதும் தனித்தமிழ் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டுமென்றோ நன்னூல் இலக்கணத்தைப் பின்பற்றி மட்டும் எழுத வேண்டுமென்றோ எங்கேயும் கூறவில்லை. கிரந்த எழுத்துக்களுக்கும் இலக்கணமில்லை தானே? அவை ஏராளமான வேற்றுமொழிச் சொற்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவே. இவற்றைப் பற்றிய தெளிவான கொள்கை வரையறை விக்கியில் கிடையாதல்லவா. கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றிய என்னுடைய கருத்தை (கொள்கையை) நான் முன்னரே பதிந்திருக்கிறேன். கனகுவும் அதனை ஆதரித்திருக்கிறார். கிரந்த எழுத்தல்லாத வேற்று மொழிப் பெயர்கள் விடயத்தில் என்னுடைய நிலைப்பாடு இதுதான்.--பாஹிம் (பேச்சு) 09:54, 8 நவம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இறபீக்_சாமி&oldid=2084560" இருந்து மீள்விக்கப்பட்டது