பேச்சு:இருமம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்மையில் biட்டுக்களின் பெருவெள்ளம் என்பதுதான் இதன் அர்த்தம். முதலில் பிட் என்பதற்கு தமிழில் என்ன சொல்லை பாவிக்கலாம்? அப்படி ஒரு அடிச்சொ கிடைத்தால், அந்த சொல்லை பயன்படுத்தி பிட் புனல், பிட் பெயல் என்றவாறு மொழிபெயர்க்கலாம். உண்மையில் இதற்கான தமிழ் சொல் எமக்கு தேவை. பிட்டொரென்ட் என்பது சரியான ஒலிஎயர்ப்பாக இருக்கலாம் என நம்புகிறேன். --மு.மயூரன் 16:17, 11 ஜூலை 2006 (UTC)

BIT (DATA) - துகள் (தரவு) ; BIT RATE - துகள் வீதம் --Natkeeran 04:20, 12 ஜூலை 2006 (UTC)
Bit என ஈரெண் முறையாயின் இரும எண் முறை என்று கூறலாம். இருமம் எனில் bit என்றே கொள்லாளாம். Bit rate என்பதற்கு இருமங்கள் நகர் வீதம். அல்லது இருமங்களின் விரைசல். என்று கூறலாம். பதின்ம எண் முறை = decimal system. Octal எபதற்கு எண்மம் எனலாம் ஆனால் எண் என்னும் சொல் பல பொருள் கொண்டுள்ளதால், எட்டியம் என்று கூறலாம். மற்ற எண் முறைகளுக்கு எழுமம், அறுமம், ஐந்துமம், நான்மம் என.. Qubit என்பதற்கு கியூபிட் என்றோ குவாண்டமம் என்றோ கியூமம் என்றோ கூறலாம். மேலும் தமிழில் பிட்டு என்றாலும் ஆங்கில சொல் Bit ன் பொருளே வருவதால், பிட்டு என்றும் சொல்லலாம். இரும பிட்டு, பதின்ம பிட்டு, எட்டுவ பிட்டு, பதினாறும பிட்டு. எழும பிட்டு என்றெல்லாம் சொல்லலாம்.--C.R.Selvakumar 04:38, 12 ஜூலை 2006 (UTC)செல்வா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருமம்&oldid=1211692" இலிருந்து மீள்விக்கப்பட்டது