பேச்சு:இருக்கு வேத கால முனிவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருக்கு வேதம் என்பது நெடுங்கால சொல்வழக்கு. வல்லின ஒற்றில் முடிந்தால் அதன் ஒலிப்பு வெளிவரவே முடியாது. தமிழிலக்கணத்தில் வல்லின ஒற்றில் எச்சொல்லும் முடியக்கூடாது. சமய இலக்கியங்களிலும் இருக்கு என்னும் சொல்லாட்சியைக் காணலாம். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 'எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டு' என்று வருவதை எடுத்துக்காட்டலாம். இன்னொரு எடுத்துக்காட்டு உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இருக்குறு மந்தணர் சந்தியின்வாய், பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே. எனவே இக்கட்டுரையின் தலைப்பை இருக்கு வேதகால முனிவர்கள் எனத்திருத்தவேண்டுமெனக் கருதுகின்றேன். அருள்கூர்ந்து கூடியமட்டிலும் இலக்கணத்தைப் பின்பற்றி எழுதவேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:55, 16 சூலை 2016 (UTC)