பேச்சு:இராமகிருசுண இயக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு ராமகிருஷ்ண மிஷன் என இருக்க வேண்டும். மிஷன் என்பதற்கு இங்கு பொருத்தமான தமிழ் சொல் என்ன?--Kanags \பேச்சு 10:38, 5 ஜனவரி 2010 (UTC)

மிசன் என்று வைக்கலாம் . இல்லை என்றால் ராமகிருஷ்ண மடம் என்று தலைப்பை வைத்து , கட்டுரைக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடலாம் என்பது என் கருத்து.--இராஜ்குமார் 14.02 , 5 ஜனவரி 2010 (Riyadh)
ராமகிருஷ்ண மடம் ஏற்றுக்கொள்ளத்தக்கது.--Kanags \பேச்சு 11:05, 5 ஜனவரி 2010 (UTC)
ராமகிருஷ்ண மடம் என தனி அமைப்பு உள்ளது.அங்கு துறவிகளுக்கான பயிற்சி போன்றவை கொடுக்கப்படுகின்றன.கோவில் போன்று வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறித்தவ seminary போன்றது. மிசன் என்பது பொது சேவையை கருத்தில் கொண்டது. இராமகிருஷ்ண மிசன் என்று மாற்றலாமா ? தமிழ் ஊடகங்களில் மிஷன் என்றே பயன்படுத்துகிறார்கள். மிஷன் ஹைஸ்கூலை என்னவென்று கூறுகிறோம் ? மிஷன் என்பதற்கு இங்கு பொருத்தமான தமிழ் சொல் என்ன?--மணியன் 11:18, 5 ஜனவரி 2010 (UTC) சேவைக் குழுமம் என்று மொழி பெயர்க்கலாமா ?--மணியன் 11:30, 5 ஜனவரி 2010 (UTC)
ஒரு சொல்லாக பெயரிட பரிந்துரைக்கிறேன் . mission என்றால் குறிக்கோள் என்று பொருள் . குறிக்கோளை உடைய ஒரு மையம் அல்லது இயக்கம் என்பதுபோல் பொருள் படுமாறு ஒரு சொல்லை தேட வேண்டும் என்று நினைகிறேன் . குறிப்பமைப்பு , குறிப்பாணையம் என்று வைத்தால் சரியாகுமா ? இது எனது சிந்தனை . --இராஜ்குமார் 15.24 , 5 ஜனவரி 2010 (Riyadh)

இராமகிருசுண இயக்கம் என்பதே மிகச்சரியான சொல் ஆகும்.

  • Hermitage - ஆச்சிரமம்->ஆசிரமம் = மத(மன)நோக்கங்களுடன்.(தனிப்பொருள்)
  • monastery - மடம், விகாரம், சத்திரம், சாவடி, கோயில், கற்பிடம்.(பல பொருள்) மத(மன)நோக்கங்களுடன் + வழிபோக்கர்களுக்காக(அனைவருக்கும்)
  • mission- இட்டுப்பிறத்தல்-->புதிய மாற்றம் (இயக்கம்) மிஷன்,மிசன் என்பது ஒலிபெயர்ப்பு மட்டுமே, மொழிபெயர்ப்பு இல்லை.

இராமகிருசுண இயக்க கல்வி நிறுவனத்தில் தமிழ் உட்பட 17 மொழிகள் கற்பிக்கப் படுகின்றன.த* உழவன் 12:38, 5 ஜனவரி 2010 (UTC)

இது நன்றாக உள்ளது . இராமகிருசுண இயக்கம் , இராமகிருசுண மடம் . இரண்டும் அல்லது அனைத்தையும் சேர்த்து குறிப்பிடுகையில் இராமகிருசுண குழுமம் . --இராஜ்குமார் 16.05 , 5 ஜனவரி 2010 (Riyadh)