பேச்சு:இராசேந்திர சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png இராசேந்திர சோழன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கட்டுரையில் பல இடங்களில் சான்றுகோள்கள் தேவைப்படுகின்றன. மோகன்தாசும், சுந்தரும் மற்றவர்களும் பார்த்து சரி செய்ய வேண்டுகிறேன். --செல்வா 20:47, 25 ஏப்ரல் 2008 (UTC)

கட்டுரையில், "இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த ..." என்றிருக்கிறது. இந்திரன் என்பவன் வரலாற்றில் இருந்த கதாபாத்திரம் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. இதற்கு வரலாற்று ஆதாரம் தேவை. பண்டைக் காலத்தில் ஈழம் எனுப்பட்டது முழு இலங்கையையுமேயாகும். அவ்வாறிருக்க, இராசேந்திரன் ஈழம் முழுவதையும் கைப்பற்றி ஆட்சி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல். ஏனெனில், 1815 ஆம் ஆண்டு வரையில் முழு இலங்கையையும் எந்தவொரு அந்நிய நாடும் வெற்றி கொள்ளவில்லை. குறிப்பாக, கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி பதின் மூன்றாம் நூற்றாண்டு வரையில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக இலங்கையின் தெற்கில் இருந்த உறுகுணை அரசு எந்தவொரு வெளிநாட்டினராலும் வெற்றிகொள்ளப்படவில்லை.--பாஹிம் 00:30, 18 சூலை 2011 (UTC)

ஆம். பாஹிம் கூறுவதே சரி. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி பதின் மூன்றாம் நூற்றாண்டு வரையில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக இலங்கையின் தெற்கில் இருந்த உறுகுணை அரசு எந்தவொரு வெளிநாட்டினராலும் வெற்றிகொள்ளப்படவில்லை. என்பது உண்மையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:44, 7 சூன் 2013 (UTC)