பேச்சு:இரகுநாத்து மனே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்த்துக்கலை நிகழ்ச்சிகள் -தலைப்பு எனக்குப் புரியவில்லை. ஏதேனும் எழுத்துப் பிழையா அல்லது இது ஒருவகை அமைப்பா?--Booradleyp (பேச்சு) 19:16, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]

நிகழ்த்துக்கலை என்பது performing arts என்பதற்கு ஈடாகப் பலர் பயன்படுத்துகின்றனர் (நான் ஆக்கிய சொல் அன்று). நிகழ்ச்சி என்பது event. நிகழ்த்துக்கலை என்பது நிகழ்நேரத்தில் செய்து காட்டும் கலை வடிவம் என்று நான் புரிந்துகொன்டிருக்கின்றேன். ஆடல், பாடல், நாடகம் முதலியவை. வேறு நல்ல முறையில் கூற வழி இருந்தால் சொல்லுங்கள் திருத்திவிடுவோம். --செல்வா (பேச்சு) 02:00, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
அரங்கேற்றங்கள்--இரவி (பேச்சு) 04:55, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
நிகழ் கலை என்பதே பொதுவான பயன்பாடு.--Kanags \உரையாடுக 09:02, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
http://en.wikipedia.org/wiki/Raghunath_Manet கட்டுரையில் performers என்று வரும் இடத்தில் கலைஞர்கள் என்றும் performances என்று வரும் இடத்தில் அரங்கேற்றங்கள் என்றும் குறிப்பிடலாம். Performing arts = நிகழ்த்துக் கலைகள் தான். ஆனால், இந்தக் கட்டுரையில் அந்தச் சொல் வருவதற்கான இடம் இல்லை--இரவி (பேச்சு) 13:17, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
அரங்கேற்றம் என்பது முதன் முறையாக தன் அல்லது தம் கலையை "உலகின்" முன் நிகழ்த்தி ஏற்பு பெறும் தனிச்சிறப்பான நிகழ்ச்சி. நாம் முன்னர் பொதுவாக கலைநிகழ்ச்சிகள் என்ற எளிய சொல்லையே பயன்படுத்திவந்தோம். இன்று பலரும் வில்லுப்பாட்டு, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்துக்கலை என்கிறார்கள். நிகழ்த்துக்கலை நிகழ்ச்சிகள் என்பதை இப்படியான கலை நிகழ்ச்சிகளைக் குறிக்கப் பயன்படுத்தினேன். இது எனக்கும் நிறைவு தருவதாய் இல்லை. அரங்கேற்றம் என்பது சரியான சொல் அன்று (இங்கு). கலைநிகழ்ச்சி என்பது பொருந்தும். ஆனால் கலை நிகழ்ச்சி என்பது ஒரு விழா போலவும், பல நிகழ்ச்சிகள் அடங்கிய ஒன்று போலவும் தென் படுகின்றது. நாம் வெறும் நிகழ்ச்சி = performance என்றும் கொள்ளலாம். --செல்வா (பேச்சு) 13:47, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • எனது சந்தேகத்திற்குக் கிடைத்த விளக்கங்களுக்கு நன்றி. நிகழ்த்துக்கலை நிகழ்ச்சிகள் என்பது கூறும் பொருள் புரிகிறது இப்போது.--Booradleyp (பேச்சு) 17:36, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
வினைத்தொகையாகையால் நிகழ்த்துகலை என்று தானே வர வேண்டும். அவ்வாறு தான் கேள்விப்பட்டிருக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:22, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஆம் நிகழ்த்துகலை என்று க் இல்லாமல் இருப்பதே சரி. நன்றி.--செல்வா (பேச்சு) 14:28, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரகுநாத்து_மனே&oldid=1167776" இலிருந்து மீள்விக்கப்பட்டது