பேச்சு:இன்னாலில்லாஃகி வ-இன்னா இலைஃகி ராச்சிவூன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை விக்கி வழக்குப் படி: இன்னாலில்லாகி வ-இன்னா இலைகி ராச்சிவூன் என மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 08:50, 21 ஏப்ரல் 2017 (UTC)

தமிழில் எஃகு, வெஃகாமை, அஃகுதல், அஃகாமை எனப்பற்பல வழக்குகள் நன்கு உண்டே. இது முறையான எழுத்துக்கள் காற்றொலி ககரவொலி. சொல்லின் முதலில் ஃகாக்கிங்[கு] என எழுதுவதை உழற்சி எனலாம், ஆனால் சொல்லினிடையிலோ கடையிலோ உயிர்மெய்க் காற்றொலிக்ககரம் வர எந்தத் தடையுமில்லை. தடையிருந்தால் எடுத்துக்கூறுங்கள். இன்னாலில்லாகி என்பதை innaalillaag*i என்றும் இலைகி என்பதை ilaig*i என்றும் ஒலிக்கவேண்டும். இதில் g*i என்பது g என்னும் ஒலியிலிருந்து ஏற்த்தாழ h ஒலிவரையிலும் வேறுபடக்கூடியது. ஆனால் h என ஒலிப்பது மிகை. சிலர் வருவாக என்பதை varuvaaga, என்பது முதல் varuvaaha என்பதுவரை வேறுபட ஒலிப்பார்கள். இடைவரும் ககரத்துக்கு மிகப்பல வேறுபட்ட ஒலிகள் இருந்தாலும் மூன்று ஒலிகள் சற்றேஏ அடையாளப்படுத்தக்கூடிய ஒலிகள். ஒன்று ஆங்கிலத்தில் உள்ள அதே ga இரண்டாவது மூக்கொலி கலந்த ga. இது ஆங்கிலத்தில் singer, bringer என்பது போன்ற சொற்களில் வரும் மூக்கொலி மெலிந்த ககரம். தமிழின் தூய மோக்கொலி கலந்த மெலிந்த ககரம் தங்கம், வங்கம், மங்கை, நங்கை பாங்கி போன்ற சொற்களில் வருவன. மூன்றாவது ககரம் காகம், பாகம், பகுத்தல், வகிடு, வகை, வாகை, தோகை மகன் முதலியன. இதில் வரும் இடைப்பட்ட உயிர்மெய் ககரம் காற்றொலி கலந்த ககரம். முழுக்காற்றொலி H ஒலியன்று. இதனைத்தான் நான் g*i எனக்குறித்துள்ளேன். இதில் 80% g + 20 % h என்பது போல இருக்கும். நான் 80-20 என்பது 90-10 ஆகவோ 70-30 ஆகவோ இருக்கலாம். எழுத்துச்சூழலைப் பொருத்து மாறலாம். ஆனால் 0-100 ஆக இருப்பது பிழையான ஒலிப்பு. யார் பிழை என கூறக்கூடும். எல்லாமும் சரியே என்னும் புதிய நோக்கில் பார்த்தால் பிழையென்று ஏதுமில்லை. இவற்றுக்கு சான்றாக என்ன ஆய்வுகள் உள்ளன? அதிகம் இல்லை. எலினோர் கீன் (Elinor Keane) என்னும் மொழியொலியியல் ஆய்வாளருடன் நான் நிகழ்த்திய உரையாடலில் அடிப்படையிலும் வெளியிடப்பட்ட ஆய்வின் அடிப்படையிலும் என் கூற்றுகளுக்கு ஓரளவுக்குச் சான்று பகரமுடியும். ஆனால் Garbage in garbage out என்பது போல தக்க தரவுகள் உள்ளிடாமல் தகக் முடிவுகளுக்கும் வருதல் இயலாது. ஆகவே. இதில் மிகப்பல சிக்கல்கள் உள்ளன. இப்போதைக்கு நல்ல தமிழறிஞர்களின் பரந்துபட்ட பட்டறிவும் நுண்ணறிவுமே துணை. இந்த நீண்ட பகுதி, இடைப்பட்ட ககரவொலியின் மாறுபட்ட ஒலிப்பைப் பற்றியதுதான். இடையே ஆய்தத்தோடு வரும் வெஃகாமை, எஃகு போன்ற காற்றொலிக்ககரம் பற்றியதன்று. நான் இட்ட தலைப்பு முற்றிலும் தமிழ்முறைப்பற்றியதே, ராச்சிவூன் தவிர. தமிழில் இராச்சியூன் அல்லது இராச்சிவூன் என இகரம் முன்னே வரும்படி எழுதவேண்டும். இதனைத் தவிர்த்து இதில் தமிழ்முறைப்பிறழ்வு ஏதுமில்லை. பின்னர் மே 2009 இல் நான் எலினோர் கீன் அவர்களோடு உரையாடியவற்றுள் சிறுபகுதிகளை படியிட்டு என் கூற்றுகளுக்குச் சான்று பகர்கின்றேன். நான் முன்னர் பார்த்த ஆய்வுத்தாள் இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை. [1] மேலும் சான்றுகளை நான் இங்கே பின்னர் பகிர்கின்றேன்.--செல்வா (பேச்சு) 13:22, 21 ஏப்ரல் 2017 (UTC)
//அல்லாஃகாகிய// இவ்வாறு எழுதுவது சரி தானா?--Kanags \உரையாடுக 22:38, 21 ஏப்ரல் 2017 (UTC)
அல்லாஃகு என்பது அல்லாஹ் என எழுதுவதன் தமிழ் வடிவம். அரபுமொழியாளர் உட்பட யாராலும் -ஹ் என நிறுத்தமுடியாது. அது அல்லாஹ்ஹு என வொரு குற்றியலுகர ஹு-வுடன் தான் நிறுத்தவியலும். எனவேதான் தமிழில் அல்லாஃகு. அடுத்ததாக அல்லாஃகு + ஆகிய = அல்லாஃகாகிய. --செல்வா (பேச்சு) 00:38, 22 ஏப்ரல் 2017 (UTC)
அல்லாஃகுவாகிய என எழுதுவது விளங்கிக்கொள்ள முடிகிறது.--Kanags \உரையாடுக 00:41, 22 ஏப்ரல் 2017 (UTC)
அளவு + ஆகிய என்பது அளவாகிய என்று உகரம் கெட்டு ஆ சேரும்தானே. வல்லூறு ஆகிய வல்லூறாகிய என உகரம் கெட்டுப் புணரும் அல்லவா. இதே முறையில்தான் அல்லாஃகு + ஆகிய = அல்லாஃகாகிய. இதில் ஏதும் பிழையிருப்பதாக நான் நினைக்கவில்லை.--செல்வா (பேச்சு) 00:18, 24 ஏப்ரல் 2017 (UTC)