உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்தோனேசியத் தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை பற்றி மலேசியத் தமிழறிஞர் சி. ஜெயபாரதி அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்[1]--Kanags \பேச்சு 06:36, 29 டிசம்பர் 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் 'இந்தோனேசியத் தமிழர்கள்' என்னும் தலைப்பில் கீழ்க்கண்ட விபரங்கள் காணப்படுகின்றன.

>>>>>>>>>>>>>>>>>>>>>. தமிழ் பின்புலத்துடன் இந்தோனேசியாவில் வசிக்கும் தமிழர் இந்தோனேசியாத் தமிழர் எனப்படுவர். இந்தோனேசியாவில் தமிழர் வரலாறு சோழர் படையெடுப்புகளுடன் தொடங்குகிறது. யாவா, Sumatra மற்றும் சில தீவுகளில் படையெடுத்து சென்ற தமிழர் பலர் அங்கேயே தங்கினர். இருப்பினிம் காலப்போக்கில் அவர்கள் இந்தோனேசியாவில் இருந்த மக்களோடு கலந்து விட்டனர். அதன் பின்னர் 1830களின் டச்சு காலனித்துவ காரர்களால் தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருவிக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் தொழில் பொருளாதார வாய்ப்புகள் தேடி மேலும் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். இன்று இங்கு 40 000 மேற்பட்ட தமிழர் வசிப்பதாக கூறப்படுகிறது.[1] >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

இதில் தவறான தகவல்கள் காணப்படுகின்றன. முதலில் இந்த இரு வரிகளை எடுத்துக்கொள்வோம். >>>>>>>>>>>>>>>>>>>>>>>... இந்தோனேசியாவில் தமிழர் வரலாறு சோழர் படையெடுப்புகளுடன் தொடங்குகிறது. யாவா, Sumatra மற்றும் சில தீவுகளில் படையெடுத்து சென்ற தமிழர் பலர் அங்கேயே தங்கினர். <<<<<<<<<<<<<<<<<<<<<<,,,,,

இந்த வரிகளுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. சோழர் படையெடுப்பு என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது முதலாம் ராஜேந்திர சோழரின் படையெடுப்பு என்று எடுத்துக் கொண்டால், அது நடந்தது 1023-1026க்குள். இதன்பின்னர்தான் தமிழர்கள் அங்கே குடியேறினார்கள் என்றும் அங்கேயே தங்கிவிட்டார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை. எல்லாரையும் போல தமிழர்களும் ஆயிரத்தெந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே வரப்போக இருந்தனர். ஆங்காங்கு சில பட்டினங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கு வர்த்தக மையங்கள் போன்றவற்றை வைத்திருந்தனர். ராஜேந்திர சோழர் படையெடுப்பின்போது சில இடங்களில் தமிழர்கள் நன்கு வளமுடன் வாழ்ந்துகொண்டிருந்தனர். முக்கியமான பல ஊர்களில் அவர்களும் இருந்தனர். தமிழர்கள் படையெடுப்பு முன்னிட்டு மட்டுமே வந்தார்கள் என்பதைவிட வர்த்தக நிமித்தம் வந்ததையே அழுத்தமாகச் சொல்லவேண்டும். சில தமிழர் மன்னர் குடியினரும் வந்து அரசுகளை நிறுவியிருக்கின்றனர். அவர்கள் நாளடைவில் அங்குள்ள மக்களுடன் கலந்துவிட்டனர். இது பழஞ்சரித்திரம்.

ஆனால் தமிழ் முஸ்லிம்கள் 19-ஆம் நூற்றாண்டுவரைக்கும் வரப்போக இருந்திருக்கின்றனர். அவர்களின் வம்சாவளியினர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். தற்காலத்துத் தமிழர்களைப் பற்றி அடுத்தாற்போலச் சொல்கிறேன். அன்புடன் ஜெயபாரதி

ஜெயபாரதி அவர்கள் இதை எங்கே எழுதியிருக்கிறார்கள்? அதற்கு ஒரு இணைப்புக் கொடுத்தால் நல்லது. இக் கருத்துக்களுக்கு ஆதாரம் இருக்குமானால் ஜெயபாரதி அவர்களின் அனுமதியோடு கட்டுரையில் சேர்த்துவிடலாம். மயூரநாதன் 18:50, 29 டிசம்பர் 2009 (UTC)
இக்குறிப்பின் தொடுப்பு அகத்தியர் யாகூ! குழுமத்தில் உள்ளது. ஜெயபாரதி அவர்கள் மேற்கோள்கள் எதுவும் இல்லாமல் தான் எழுதுவார். எனவே இக்கருத்துக்களுக்கு ஆதாரம் தேடுவது எப்படி என்று தெரியவில்லை. எனினும் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.--Kanags \பேச்சு 22:12, 29 டிசம்பர் 2009 (UTC)
அவரது கருத்துக்களைச் சேப்பதில் எனக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை. --Natkeeran 01:58, 30 டிசம்பர் 2009 (UTC)

இந்தோனேசியத் தமிழர்[தொகு]

அங்கு நான் பல தமிழர்களைச் சந்தித்துள்ளேன். சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது. பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அங்குள்ள தமிழர்களும் மற்ற இந்தியர்களும் பொதுவாக இந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். இலங்கையிலிருந்து அங்கு சென்று திருமணம் முடித்து வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பலரும் இருப்பதைக் காண முடிகிறது. எனினும் தமிழ் பேசுவோரைக் கண்டுகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், இந்தோனேஷிய அரசாங்கம் இந்தோனேசிய மொழியைப் பயன்படுத்துவதையே அங்கீகரிக்கிறது. தமிழ் பேசுவதில் பிரச்சினையில்லை. சில தமிழ் அமைப்புக்களும் இருக்கின்றன. நான் அவ்வாறான சில அமைப்புக்களை ஒன்று சேர்த்து, பரந்த இந்தோனேசிய தமிழ் அமைப்பு ஒன்றை நிறுவுவது பற்றி ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். தமிழ் ஊடகங்கள் பற்றிக் கூற முடியவில்லை. ஏனெனில், அவ்வாறான எதுவும் பெரிய அளவில் காணப்படுவதில்லை. சில கடைகளில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கின்றன. சில வீடுகளில் தமிழ் பேசுகிறார்கள். எனினும் அவர்கள் பரந்துபட்டு இருப்பதால், பெரியளவில் அவர்களால் எதுவும் மொழி ரீதியாகச் சாதிக்க முடியவில்லை. தமிழ்க் கல்வி பெறுவது சில வீடுகளிலும் தமிழர்கள் செறிந்திருக்கும் சில இடங்களிலும் மட்டுமே சாத்தியம். பாடசாலைகளில் தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. நான் இருக்கும் ஜகார்த்தா மாநகரில் அதற்கான பிரத்தியேக வகுப்புக்களையேனும் இதுவரை காணமுடயவில்லை. எனினும் அங்குள்ள தமிழர்கள் சிலர் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்க் கல்வி பெறுகிறார்கள். மேலும், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தொடர்புள்ள இந்தோனேசிய இனத்தவர்கள் (அவர்களைப் பொதுவாக ப்ரிபூமி Pribhumi என்றழைக்கிறார்கள்) சிலரும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வதன் மூலம் இலங்கை, இந்தியத் தமிழர்களுடன் தொடர்புபட்டவர்களும் தமிழ் கற்க வேண்டுமென விழைகிறார்கள்.--Fahimrazick 16:40, 24 ஜூலை 2010 (UTC)

இந்தோனேசியத் தமிழர் பற்றி அறிய ஆவல். அங்கு அதிக தமிழர்கள் வாழ்கின்றார்களா? தமிழ் ஊடகங்கள், அமைப்புகள் உள்ளனவா? தமிழ் கல்வி பெறலாமா போன்ற தகவல்கள். மிக்க நன்றி. --Natkeeran 16:13, 24 ஜூலை 2010 (UTC)

தகவல்களுக்கு மிக்க நன்றி. இவற்றைக் கட்டுரையில் சேர்க்கலாம். இந்தோனேசியத் தமிழர்களின் அல்லது அவர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட எதாவது வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் இருந்தால் சுட்டவும். நன்றி.