பேச்சு:இந்து சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதிப்பகம், வெளியீட்டகம் பெயர் குறிக்க முடியுமா?[தொகு]

புன்னியாமீன் அவர்களே, இலங்கையில் வெளியான தமிழ் நூல்களின் பட்டியலைத் தொகுக்கும் சீரிய பணியை முனைப்புடன் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்!

தமிழ்நாட்டில் வெளியான, வெளியாகின்ற நூல்களையும் இவ்வாறு தொகுப்பதற்கு யாராவது முன்வருவார்களா என்று ஆவலோடு காத்திருக்கிறேன். முன்னாட்களில் ரோஜா முத்தையா நூலகம் உருவானது; தமிழுலகுக்குப் பெரும் பயன் நல்கியது. இன்றும் அவ்வாறே ஒரு தொகுப்பு தேவைப்படுகிறது. தமிழ் விக்கி இக்கனவை நனவாக்குமா?

ஒரு சிறு வேண்டுகோள்: நூல் தலைப்பு, ஆசிரியர், பதிப்பு ஆண்டு ஆகிய தகவல்களைத் தரும்போது, கூடவே பதிப்பகம் (வெளியீட்டகம்) பெயரும் நகர்ப் பெயரும் இணைக்க முடியுமா? நன்றி! பாராட்டுகள்!--பவுல்-Paul 15:21, 3 பெப்ரவரி 2011 (UTC)