பேச்சு:இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புடையீர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் என்ற இந்தப் பெயரினை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் என மாற்ற வேண்டுகிறேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 15:00, 7 சூன் 2021 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான்: 1, 2 என்று அரசு பயன்பாட்டைப் பார்க்கையில் கல்வி அமைப்புகளுக்கு "கழகம்" என்ற சொல் சரிபோலத் தெரிகிறது. நீங்கள் எந்த மேற்கோளின் அடிப்படையில் இதை மாற்றப் பரிந்துரைக்கிறீர்கள்? -நீச்சல்காரன் (பேச்சு) 16:14, 7 சூன் 2021 (UTC)[பதிலளி]
Institute என்பதன் தமிழ் பொருள் நிறுவனம் என்பதுதானே? இது ஒரு ஆராய்ச்சி நிறுவனம், என்ற அடிப்படையில் பரிந்துரைச் செய்யப்படுகிறது. கழகம் என்பது Academy என்பதை குறிக்கப்பயன்படுத்துகின்றோம். இங்கு ஆய்வுகள் போன்ற அன்றாடப் பணிகள் நடைபெறுவதில்லை. தாங்கள் குறிப்பிட்ட முதல் உசாத்துணையில் பெரும்பாலும் institute என்பதற்கு நிறுவனம் என்றே பொருள்படுகிறது.

இரண்டாவது உசாத்துணையில் மேம்போக்காக தமிழ்படுத்தப்பட்டுள்ளது. உ.ம். Indian Institute of Sugarcane Research என்பதன் தமிழாக்கம் இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்றிருக்கவேண்டும். ஆனால் இங்கு கரும்பு ஆராய்ச்சி கழகம் எனக் குறிப்பிட்டுள்ளனர். Central Institute For Cotton Research என்பதை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் என மொழிப்பெயர்துள்ளதையும் காண்க--சத்திரத்தான் (பேச்சு) 17:20, 7 சூன் 2021 (UTC)[பதிலளி]

ஐஐடி போன்ற கல்வி அமைப்பின் கட்டுரைகளில் எல்லாம் Institute என்பதைக் கழகம் என்றே வழங்குகிறோம். நீங்கள் குறிப்பிடுவது போல நிறுவனமா கழகமா என்று ஆய்வுசெய்தால் ஒவ்வருக்கொருவர் முரண்படுகிறது. அலுவல்பெயராக எங்குமில்லாத போது "இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்" என்று முதன்மைப்படுத்த இயலாதே. -நீச்சல்காரன் (பேச்சு) 19:06, 9 சூன் 2021 (UTC)[பதிலளி]