பேச்சு:இந்திய மயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய மயில் என்பது Indian Peafowl ன் அப்பட்டமான மொழிபெயர்ப்பு. தமிழ்நாட்டில் வழக்கில் மயில் என்றே இவை அழைக்கப்படுகின்றன. ஆகவே இந்திய மயில் என்பதை நீக்கி விட்டு மயில் என தலைப்பை மாற்றுவதே சரியாக இருக்கும்.

அதே போல் https://ta.wikipedia.org/s/g4 (தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்) பக்கத்தில் நீல மயில் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதையும் மயில் எனத் திருத்தவேண்டும். PJeganathan (பேச்சு) 17:50, 29 சனவரி 2018 (UTC)

PJeganathan! பொதுவான மயில்களுக்கு வேறொரு கட்டுரை உள்ளது. அது ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Peafowl என்ற கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை குறிப்பாக தென்னாசியப் பகுதிகளில் இருக்கும், குறிப்பிட்ட ஒரு மயில் இனத்தைக் குறிக்கும் கட்டுரையாக உள்ளது. இது en:Indian peafowl என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. மயில் கட்டுரையினுள்ளேயே இந்திய மயிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மயில் என்ற பொதுப் பெயரினுள் வரும் ஒரு குறிப்பிட்ட இனமாகிய இந்திய மயிலை வேறுபடுத்திக் காட்டுவதில் தவறில்லை என நினைக்கிறேன். குறிப்பிட்ட இந்த இனத்தைச் சேர்ந்த மயிலுக்கு இந்தத் தலைப்பு பொருத்தமில்லை எனில், வேறு தலைப்பைப் பரிந்துரைத்து உரையாடலாம்.--கலை (பேச்சு) 20:18, 29 சனவரி 2018 (UTC)
👍 விருப்பம் --உழவன் (உரை)
👍 விருப்பம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:58, 30 சனவரி 2018 (UTC)
நன்றி. எனது ஆலோசனைகள்/பரிந்துரைகள்:
  1. மயில் எனும் பக்கத்தின் தலைப்பை மயில்கள் என மாற்றி அமைத்து அங்கே மயில், பச்சை மயில், காங்கோ மயில் ஆகியன பற்றிய குறிப்புகளைத் தரலாம். இவை அனைத்திற்கும் பொதுவான விவரங்களை அந்தப்பக்கத்தில் தரலாம்.
  2. அங்குள்ள மயில் (Indian Peafowl) பற்றிய விவரங்களை இங்கு இந்திய மயில் எனும் பக்கத்திற்கு எடுத்து வரலாம்.
  3. இந்திய மயில் எனும் பக்கத்தை மயில் என மறுபெயர் இடலாம்.

PJeganathan (பேச்சு) 07:17, 30 சனவரி 2018 (UTC)

மேலே கலை பரிந்துரைத்திருப்பவையே ஏற்புடையன. மயில்கள் எனப் பன்மையில் கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதில்லை. இப்போதுள்ள தலைப்புகள் அப்படியே இருக்கலாம்.--Kanags (பேச்சு) 08:08, 30 சனவரி 2018 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி PJeganathan! Kanags கூறியுள்ளதுபோல் மயில்கள் பன்மையைக் குறிக்குமேயன்றி, மயில்களின் வெவ்வேறு இனத்தைக் குறிப்பதாகாது. விக்கியில் பன்மையில் தலைப்பிடுவதில்லை என்பதனால் அதனை அப்படியே வைத்திருக்கலாம். மயில் கட்டுரையை பல மேற்கோள்களுடன் விரிவாக்கம் செய்துள்ளேன். பொதுவாகவே Pavo cristatus ஐ இந்திய மயில் என்றே அழைக்கின்றனர். நாம் நமது நாட்டிலிருக்கும் மயிலைத் தனிப்படுத்திக் காட்டத் தேவையில்லாததால், பொதுவான மயில் என்ற பெயரையே பயன்படுத்துகிறோம். ஆனால் கலைக்களஞ்சியக் கட்டுரையில் குறிப்பிட்ட இனத்தை வேறுபடுத்திக் காட்ட இந்திய மயில் என்றே அழைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.--கலை (பேச்சு) 09:18, 30 சனவரி 2018 (UTC)
அனைவருக்கும் நன்றி. "இந்திய மயில் அல்லது மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற" என்கிற வரியைச் சேர்த்துள்ளேன். இது சரியாக இருக்குமா? PJeganathan (பேச்சு) 11:24, 30 சனவரி 2018 (UTC)
@PJeganathan: இவ்வாறு எழுதுவது சரியான முறையே. நன்றி.--Kanags (பேச்சு) 11:37, 30 சனவரி 2018 (UTC)
நன்றி PJeganathan! நீங்கள் மாற்றியமைத்தவாறே மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற என்பது சரியாக இருக்கிறது. அத்துடன், இவற்றின் நீலக் கழுத்துக் காரணமாக நீல மயில் என்றும் கூறப்படுவதனால், அதனையும் இணைத்துள்ளேன். பொதுப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சொற்றொடரைச் சிறிது மாற்றியமைத்துள்ளேன். பாருங்கள். --கலை (பேச்சு) 15:26, 30 சனவரி 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_மயில்&oldid=2478199" இருந்து மீள்விக்கப்பட்டது