பேச்சு:இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

குவஹாத்தி என்று எழுதுவதினும் கௌகாத்தி என்று எழுதலாமே. எழுதாளர் செயமோகன், அசாமில் வாழும் வலைப்பதிவர் ரத்னீசு போன்றவர்களும் கௌகாத்தி என்று எழுதுகிறார்கள். rediff.com, மக்கள் முரசு ஆகிய வெளியீடுகளும் கௌகாத்தி என்று எழுதுகிறார்கள். இவ்வெடுத்துக்காட்டுகள் ஏதும் இல்லாவிடினும், தமிழ் விக்கிப்பீடியாவில் கூடியமட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதலாம் என்னும் கருத்துப்படி கௌகாத்தி அல்லது குவகாத்தி என்று எழுதலாம் என நினைக்கின்றேன். ஒலிப்புத்துல்லியம் வேண்டும் எனில் குவஃகாத்தி என்றோ, கௌஃகாத்தி என்றோ எழுதலாம். --செல்வா 23:18, 8 ஆகஸ்ட் 2009 (UTC)

செல்வா,தமிழ் விக்கியில் இருந்தே நாடுகள்,மாநிலப்பெயர்கள் இவற்றை பயன்படுத்துகிறேன்.குவஹாத்தி என்றே நகரைப் பற்றிய கட்டுரை உள்ளது. தலைப்பை மாற்றுவது குறித்து எனக்கு மறுப்பெதுவும் இல்லை. அது த,வியில் ஒரேசீராக இருத்தல் நலம். நாடுகள் பட்டியலிலும் கூடுதல் கிரந்த எழுத்துக்கள் உள்ளன. இவற்றை சீரமைத்து ஒரு glossary பக்கம் உருவாக்கினால் அனைவரும் ஒரே தளத்தில் இருக்க உதவும்.தலைப்பை மாற்றி நகர்த்தினால் உரையில் மாற்றங்கள் செய்துவிடுகிறேன்.--மணியன் 13:58, 9 ஆகஸ்ட் 2009 (UTC)