பேச்சு:இந்திய அலங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மற்றும் உயிரினத்தின் பெயர் மாற்றம் பரிந்துரை[தொகு]

இந்தத் தலைப்பு ஒரு அப்பட்டமான (ஆங்கில வழி) மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் இவை Indian Pangolin எனவும், தவறாக Anteater எனவும் அறியப்படுகிறது. இந்த இரண்டு ஆங்கிலப் பெயர்களை ஒன்று சேர்த்து Indian Anteater என அறியப்பட்டு அதையே தலைப்பாகவும் இங்கே வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உயிரினத்திற்கு தமிழில் தனித்துவமான பெயர் உண்டு. இது தமிழ்நாட்டில் பரவலாக அலங்கு என்றே அறியப்படுகிறது [1], [2], [3]. சில இடங்களில் அழுங்கு என்றும் அறியப்படுகிறது [4]. ஆகவே இந்தத் தலைப்பையும் அலங்கு என்றே வைக்கவேண்டும்.PJeganathan (பேச்சு) 04:52, 27 மார்ச் 2023 (UTC)

கட்டுரையின் தலைப்பை இந்திய அலங்கு என நகர்த்தியுள்ளேன்.--கு. அருளரசன் (பேச்சு) 09:17, 27 மார்ச் 2023 (UTC)

ஆதாரங்கள்[தொகு]

  1. கள்ளச் சந்தையில் காட்டுயிர் சு. தியோடோர் பாஸ்கரன் (21 Jul 2018), தி இந்து தமிழ் திசை, உயிர்மூச்சு இணைப்பிதழ்
  2. இயற்கை: செய்திகள், சிந்தனைகள் - ச. முகமது அலி (2007) பக்கம் 180
  3. பல்லுயிரியம் - ச. முகமது அலி (2010) பக்கம் 143
  4. மா. கிருஷ்ணன் (2002) மழைக்காலமும் குயிலோசையும், காலச்சுவடு பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_அலங்கு&oldid=3684332" இலிருந்து மீள்விக்கப்பட்டது