பேச்சு:இந்திய அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த தவறுதலாக நீக்கப்பட்டது மன்னிக்கவும். மணல் தொட்டியில் பயிற்சி செய்யும் பொழுது இந்த இடர் நேர்ந்து விட்டது. அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் ஒரளவுக்கு நானே முயற்சி செய்தேன், இவற்றைப் பயனர் திருத்திக் கொள்ளவும்.--செல்வம் தமிழ் 11:12, 9 மார்ச் 2009 (UTC)

செல்வம், நீங்கள் பயிற்சி எடுப்பதானால் மணல்தொட்டியில் பயிற்சி எடுங்கள். ஆனால் நீங்கள் செய்தது இந்திய அரசியலமைப்பு என்ற பெயரில் வார்ப்புருவுக்குப் பதிலாகக் கட்டுரைத் தலலப்பில் வார்ப்புருவைத் தயாரித்தீர்கள். அதனைப் பின்னர் வார்ப்புரு இந்திய அரசியலமைப்பு எனப் பெயர் மாற்றம் செய்தீர்கள். வார்ப்புருக்கள் பெயரிடும் சிறப்புமுறை ஒன்றுள்ளது. வார்ப்புருக்கள் எப்போதும் வார்ப்புரு: என்றே தொடங்க வேண்டும். அதனாலேயே நீங்கள் பிழையாக்க்த் தலைப்பிட்ட வார்ப்புருவை வார்ப்புரு:இந்திய அரசியலமைப்பு என மாற்றினேன். அது இன்னமும் உள்ளது. இந்திய அரசியலமைப்பு என்ற தலைப்பை நான் தான் நீக்கினேன். குழப்பமாக இருக்கிறதா? பயப்படாதீர்கள்:)--Kanags \பேச்சு 11:42, 9 மார்ச் 2009 (UTC)

செல்வம் தமிழ், இதே போல {{இந்தியா}} என்றும் ஒரு வார்ப்புரு ஏற்கனவே உண்டு, ஆனால் நீங்கள் மேலும் இன்னொன்று ஆக்கியுள்ளீர்கள். ஏற்கனவே உள்ளதைத் தேடுவதில் பல இடர்கள் உண்டு. தொடர்பான கட்டுரைகளில் சென்று பார்த்தால் தெரியலாம். பலமுறை எனக்கும் பிறருக்கும் இப்படியெல்லாம் நிகழ்ந்துள்ளன. அருள்கூர்ந்து பொறுமையாக, புன்முறுவலோடு இவற்றை எதிர்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். உங்கள் ஆக்கங்கள் புயல் விரைவாக வருகின்றன, என் பாராட்டுகள். நன்றிகள். பிழைதிருத்தம், சீராக்கம், உரை திருத்தம் செய்ய வேண்டியுள்ளன. செய்துவிடுவோம். --செல்வா 15:34, 9 மார்ச் 2009 (UTC)
மணல்தொட்டியில்தான் முயன்று பார்க்க வேண்டும் என்றில்லை. பயனர்:Bpselvam/முயற்சிகள் என்று நீங்களே ஒரு பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்தின் உட்பக்கமாக உருவாக்கியும் செய்யலாம். இப்படி பல உட்பக்கங்களும் உருவாக்கிக்கொள்ளலாம் (வெவ்வேறு தலைப்புகளுக்கு ஏற்றார்போல).--செல்வா 15:37, 9 மார்ச் 2009 (UTC)
இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் அனைத்தையும் ஒரே பகுப்புக்குக் கீழ் அடக்கினால் தேடுதல் பிரச்சினை இராது. இந்தியா என்ற தாய்ப்பகுப்பிற்குள் இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் என்ற புதிய பகுப்பினுள் அனைத்தையும் கொண்டு வாருங்கள்.--Kanags \பேச்சு 20:17, 9 மார்ச் 2009 (UTC)
ஆமாம் கனகு அபடிச் செய்ய வேண்டும். இதே போல பதிவேற்றும் படங்களுக்கும் செய்தல் வேண்டும்.--செல்வா 21:18, 9 மார்ச் 2009 (UTC)
அரசியலமைப்பு சட்டம், அரசமைப்புச் சட்டம் எது கூடப் பொருத்தம். --Natkeeran 23:15, 24 ஏப்ரல் 2009 (UTC)

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"[தொகு]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)