பேச்சு:இந்தியாவில் வறுமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாராட்டுகள்[தொகு]

இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல நீளம். சுவாரசிய , தெரிய வேன்டிய கட்டுரை.

"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 13:51, 26 ஏப்ரல் 2010 (UTC)

இக் கட்ட்டுரை எழுதியவரை நான் உண்மையில் நன்றியுடன்பாராட்டுகிறேன், ஆனால் மொழிபெயர்ப்பு பல இடங்களில் செயற்கையாகவும், புரிந்துகொள்ளவே இயலாமலும் இருக்கின்றது. அறிவிப்புப் பட்டி இட்டது மிகவும் சரியானது. அதன் இன்னொரு நோக்கம், இவ்வகையான கட்டுரைகளைத் தானியங்கி முறையில் ஒரு பகுப்பில் வைத்திருக்கவும் உதவும் என்பதாகும். அறிவிப்புச் சுட்டி அறிவுரை அல்ல, அது ஒழுங்குசெய்தலுக்கான வழிமுறை. நீங்களும் அறிவுரை தருவதற்கு மாறாக நல்ல வழிகளில் உரை திருத்தம் செய்யலாமே?--செல்வா 14:47, 26 ஏப்ரல் 2010 (UTC)

நீக்கிய பகுதி[தொகு]

2005 ஆம் ஆண்டின் உலக வங்கி மதிப்பீட்டில், 42% இந்தியர்கள் சர்வதேச வறுமைக் கோட்டிற்கு கீழ் $1.25 ஓர் நாளைக்கு (வாங்கும் திறன் சமநிலை, சாதாரண வரையறைகளில் ஒரு நாளைக்கு நகரப் பகுதிகளில் 21.6 ரூபாய்கள் மற்றும் ரூபாய்கள் 14.3 கிராமப் பகுதிகளில்); 1980 இல் இருந்த அளவில் 60% குறைந்திருந்தது

மொழி பெயர்ப்பு சரியாகப் புரியவில்லை. மேலும் ஆங்கில விக்கியில் 1980 களில் 90% என்று சுட்டுகின்றது.பார்க்கவும்" According to a 2005 World Bank estimate, 42% of India falls below the international poverty line of $1.25 a day (PPP, in nominal terms Rs. 21.6 a day in urban areas and Rs 14.3 in rural areas); having reduced from 90% in 1980.[1]"

ஆனால் ஆங்கில விக்கியில் உள்ள கருத்தை அது சுட்டப்படும் முதல் பத்தியிலேயே இப்பொழுது மொழிபெயர்த்து இட்டிருக்கின்றேன். பல தகவல்கள் சரியா எனவும் மெய்த்தேர்வு செய்து பார்த்தல் வேண்டும். தமிழ் விக்கிக்கட்டுரையில் உள்ள சில செய்திகள் ஆங்கிலவிக்கியில் எங்கு உள்ளது என்றும் விளங்கவில்லை, மொழி பெயர்ப்பும் புரியவில்லை.(எடுத்துக்காட்டு பாக்கித்தானின் வறுமைக்கோட்டோடு ஒப்பிடும் வரி: ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், சிலர் 41.6% பேர் ஒரு நாளைக்கு $1 குறைவாகப் பெற்று பாகிஸ்தானின் 22.6% பேருடன் ஒப்பிடுகையில் வாழ்கின்றனர்.[3]

மனிதவள மேம்பாட்டு அட்டவணை (HDI) என்று இருந்ததை மனிதவள மேம்பாட்டு சுட்டெண் என்று முன்னர் நான் மாற்றியிருந்தேன். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் மனித வளர்ச்சிச் சுட்டெண் என்றே ஒரு கட்டுரை உள்ளது.

--செல்வா 14:47, 26 ஏப்ரல் 2010 (UTC)