பேச்சு:இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரம் உயர்த்த வேண்டல்[தொகு]

சிறப்புக் கட்டுரையாக நியமிக்க விரும்புகிறேன். அரிய தகவல்களுடன் அதிகளவிலான ஆதாரங்களுடன் பல படங்களையும் உள்ளடக்கியுள்ளது. தவிர அதிகம் பேர் பார்க்ககூடியதும் ஆகும்.

ஆனால், இக்கட்டுரையில் சில குறைகள் உள்ளன. அவை,
* ஒரே கருத்து பல முறை வந்துள்ளமை. (பிரச்சனையாக உள்ளது போன்ற வரிகள்)
* விமர்சனம் (மானில அரசுகள் பொருட்டாக எடுக்கவில்லை என்பதுபோன்றவை)
* தெளிவின்மை, எளிமையின்மை (இலக்கண நடையினால்) மேலும் அதிகளவிலான ”மற்றும்”, “இந்தியா” போன்ற சொற்கள்
* சொந்தக் கருத்துகள்
கட்டுரையில் இருந்து சில வரிகள்
/இன்னும், இந்தியா வளர்ந்த நாடுகளில் அனுபவித்து வரும் சுற்றுச்சூழல் தரத்தை எட்ட நீண்ட வழி உள்ளது/
/இந்தியாவில் நீர் மற்றும் சுகாதார பிரச்சினைகள் பல சுற்று சூழல் பிரச்சினைகளுடன் தொடர்புடையன./
/இந்தியவிற்கு சொந்தமான, மற்றும் அரசு நடத்தும் நிறுவனங்கள் விதிமுறைகளை பெரும்பாலும் புறக்கணித்தனர். ஊர்ப்புற ஏழைகள் வேறு வழி இல்லாமல் வாழ்க்கைக்கு ஆதாரமாக என்ன வழி சாத்தியமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டிருந்தது. /
?இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு தீவிர பிரச்சினையாகும்./

/ குப்பை கூளங்கள் இந்திய நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் ஒரு பொதுவான காட்சியாகும். அது மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. / /ஆனால் இந்தியாவின் அனுபவம் வித்தியாசமானது./ /அரசு நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமான அமைப்புகளும் தங்கள் சட்டப்படியான கடமைகளை சரிவர செய்யாததே இதற்கு முக்கிய காரணமாகும். இதுவே மக்கள் நலனுக்காக சமூக குழுக்கள் நீதிமன்றங்களில், குறிப்பாக உச்ச நீதிமன்றங்களில் புகார்கள் பதிவு செய்ய தூண்டியிருக்கிறது./ /இந்தியாவில் சூழல்தொகுப்பின் பிரச்சினைகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமான பகுதியுமாகும்.

இவற்றைச் சீர்படுத்திய பின்னர், ஆங்காங்கே தரப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள், சம்பவங்கள் குறித்த கட்டுரைகளையும் எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:39, 13 மார்ச் 2013 (UTC)