பேச்சு:இந்தியச் சிறுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png இந்தியச் சிறுமான் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
India tiger.jpg இந்தியச் சிறுமான் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

pink, ink என்பவற்றை பிங்க், இங்க் என்று எழுதும் வழக்கம் உள்ளது. ஆனால், இது சரியான முறையாக தெரியவில்லை. சின்க்காரா என்று எழுதினால் கூடுதல் ஒலிப்பு நெருக்கம் வரலாம். --இரவி (பேச்சு) 06:42, 11 மே 2012 (UTC)

சரி தான், ரவி. சின்க்காரா என்ற தலைப்பிற்கு நகர்த்தி விடுகிறேன். --சிவக்குமார் \பேச்சு 07:28, 11 மே 2012 (UTC)
இதன் பெயர் சிங்காரா என்றுதான் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பெயர் தமிழ் மரபுப்படி பிழை.--பாஹிம் (பேச்சு) 08:55, 11 மே 2012 (UTC)
தமிழ் மரபுப்படி ன்க் என்று வராது தான். ஒலிப்பு நெருக்கம் தேவையில்லை என்றால் சிங்காரா என்றே பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 09:13, 11 மே 2012 (UTC)

இந்தியச் சிறுமான் எனும் தமிழ்த் தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:20, 11 மே 2012 (UTC)

சிங்காரமான் என்றும் விக்சனரியில் தரப்பட்டிருக்கிறது. மூலச் சொல்லுக்கு ஒப்ப உள்ளது.--Kanags \உரையாடுக 14:27, 11 மே 2012 (UTC)

சிங்காரம் வட சொல் என்பதனாலேயே தவிர்த்தேன். Indian Gazelle என்பதற்கேற்ப இந்தியச் சிறுமான் எனலாம். --மதனாகரன் (பேச்சு) 14:45, 11 மே 2012 (UTC)

குள்ளமான்[தொகு]

பதிவுக்காக: சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் தனது வானில் பறக்கும் புள்ளெலாம் என்ற கட்டுரை நூலி்ல் இதற்கு குள்ளமான் என்னும் சொல்லை ஆண்டுள்ளார். --சிவக்குமார் \பேச்சு 13:58, 24 மே 2012 (UTC)