பேச்சு:இண்ட்ராப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொ.உதயகுமார் தகப்பனார் பெயர் பொன்னுசாமி பிறந்த தேதி 7 நவம்பர் 1961.பிறப்பால் மலேசிய இந்தியன்.தொழிலால் வழக்கறிஞர். hindraf வழக்குறைஞர்.தமிழின தளபதி.மலேசியாவில் கிளந்தானில் பிறந்தவர். மலேசியாவில் இந்தியர்களுக்கு ஒற்றுமையை புகட்டிய உன்னத தலைவன்.தமிழர்களுக்காக சிறைவாசம் அனுபவித்தவர்.--−முன்நிற்கும் கருத்து Agasthia (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம். இண்ட்ராப் என்பதுதான் மிகச் சரியான சொல். அந்தச் சொல்லை மலேசியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்துகின்றனர். அனைத்து தமிழர்களும் அறிந்த சொல். இந்துராப் எனும் சொல்லை நானே முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். ஆகவே, வழக்கத்தில் இல்லாத ஒரு சொல்லைத் தவிர்ப்பது நல்லது என்று நான் கருதுகிறேன்.

2007ஆம் ஆண்டு இண்ட்ராப் பேரணியில் கலந்து கொண்டு மன உலைச்சல், உடல் வேதனைகளை அனுபவித்த ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். மலேசியாவில் நாங்கள் எங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். இண்ட்ராப் பற்றிய வரலாற்றை நன்கு அறின்து வைத்துள்ளேன்.

ஆகவே, இண்ட்ராப் எனும் கட்டுரையை நிலையான கட்டுரையாக ஏற்றுக் கொள்வோம். மலேசியாவில் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் அமைப்பையே பயன்படுத்துவோம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

தங்களின் கருத்துகளியும் சொல்லுங்கள். நன்றி.--−முன்நிற்கும் கருத்து Ksmuthukrishnan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இணைப்பு[தொகு]

கட்டுரைகள் இரண்டையும் வரலாறு பேணுவதற்காக இணைத்துள்ளேன். உங்கள் பரிந்துரைப்படி இண்ட்ராப் என்ற தலைப்பையே முதன்மைப்படுத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:40, 12 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இண்ட்ராப்&oldid=977142" இலிருந்து மீள்விக்கப்பட்டது