பேச்சு:இணையாட்களம் (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைபுலம் அல்லது இணைகளம் என்று கூறுவ்து பொருந்துமோ? புலம் என்பது வேறு இடங்களிலும் பயன்படலாம். எனவே களம், நிலம் போன்ற ஏதேனும் ஒன்று பொருந்தும். அரசு, ஆட்சி என்பது பொருந்தாதது போல தோன்றுகின்றது. ஆனால் பொருந்தும் காரணங்கள் இருந்தால் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கின்றேன்.--செல்வா 18:05, 12 ஜூலை 2007 (UTC)

ஆட்சி என்ற சொல்லை நற்கீறன் பயன்படுத்தியிருக்கிறார். அது அழகான சொல். அதை கவனிக்காமல் நான் ஏதோ ஒரு நூலில் அரசு என்ற சொல்லைப் பார்த்த ஞாபகத்தில் இணையரசு என்று தொடங்கிவிட்டேன். 'களம்' என்ற சொல் கணித உலகில் Field என்ற கருத்துக்கு நன்கு அமைந்து உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது. அதை இங்கு பயன்படுத்துவது சரியல்ல. 'புலம்' என்ற சொல்லை இந்த context இல் இப்பொழுது தான் முதன்முறை சந்திக்கிறேன். அதைப்பற்றி தெரியாது. 'அரசு' 'ஆட்சி' இரண்டுமே domain என்ற கணிதக்கருத்தை நன்கு பிரதிபலிக்கிறது.

--Profvk 18:57, 12 ஜூலை 2007 (UTC)

ஆட்சி என்ற சொல் நல்ல சொல் (அரசு என்பது பொருந்தாது என்பது என் கருத்து), ஆனாலும் ஆட்சி என்பது domain என்பதற்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. ஆட்சிப்படும் ஒன்றாகத்தான் domain என்பதைக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஆள்புலம், ஆள்நிலம், ஆள்களம் என்று ஏதேனும் ஒன்றை ஆளலாமா? --செல்வா 19:44, 18 ஜூலை 2007 (UTC)
ஆள்புலம் ஆள்களம் நன்று. ஆள்நிலம் ஒரு குறிப்பிட்ட ஆளுகையைக் குறிப்பது போல் உள்ளது. -- Sundar \பேச்சு 05:53, 19 ஜூலை 2007 (UTC)
முடிவாக "ஆள்களம்" (domain) என்பதைத் தெரிந்தெடுத்து அதையே பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே "ஆட்சி", "அரசு" என்று எழுதிய இடங்களிலெல்லாம் திருத்தம் செய்தாகவேண்டும். சிறிது சிறிதாகச் செய்கிறேன். codomain என்பது "இணை ஆள்களம்" ஆகும்.

--Profvk 13:15, 19 ஜூலை 2007 (UTC)

நாங்களும் திருத்தி உதவுகிறோம். --செல்வா 14:05, 19 ஜூலை 2007 (UTC)

website domain, protein structure domain - இந்த எல்லா இடங்களிலும் கூட ஆள்களம் (அல்லது ஆட்களம்?) பொருந்துமா?--ரவி 17:55, 19 ஜூலை 2007 (UTC)

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் பாடப்புத்தகங்களில் துணைமதிப்பகம் / துணைசார்பகம் என்ற வார்த்தைகள் பயன்படுத்துகின்றன.--சோடாபாட்டில் 05:43, 13 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]