பேச்சு:இட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png இட்லர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இடலர் என்று எழுதலாமா?--டெரன்ஸ் \பேச்சு 07:10, 17 ஜனவரி 2008 (UTC)

ஆம். இட்லர் என்றே நாம் எழுதலாம். (எ.கா: ஹிந்து -> இந்து, ஹிமாலயம்->இமயம்) --சிவகுமார் \பேச்சு 12:02, 18 ஜனவரி 2008 (UTC)

சர்வாதிகாரி - தமிழில் என்ன? கொடுங்கோலன் என்று சொல்வது benevolent dictator போன்ற இடங்களில் பொருந்தாமல் போகலாம்--ரவி 17:52, 5 பெப்ரவரி 2008 (UTC)

இட்லர் என்று எழுதலாமா என்று தெரியாது அடால்ப் இட்லர் என்று எழுதலாம், கொடுங்கோலன் என்பது முரண்பாடான சொல். அவருடைய எதிரி நாடுகள், பிடிக்காதவர்கள் வைத்தது. அவரை நேசிப்பவர்கள் அவர் நாட்டில் நிறையபேர் இருக்கின்றனர். வேறுநாட்டிலும் இருக்கின்றனர் அனைத்துலகையும் ஆள நினைப்பவர் என்ற பொருளில்தான் வைக்கப்பட்டது. இன்னும் சர்வாதிகார நாடுகள் நிறைய உள்ளன. அவற்றை கொடுங்கோலனின் நாடுகள் என்றால் சர்ச்சையாகிவிடும். ஸ்டாலினும் சர்வாதிகாரி என் ஆழைக்கப்படுபவர்தான் அவரைத்தான் ரஷ்யர்கள் மிகவும் பிடித்த 3 வது மனிதர் என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.--செல்வம் தமிழ் 17:19, 7 பெப்ரவரி 2009 (UTC)செல்வம்தமிழ்--செல்வம் தமிழ் 17:19, 7 பெப்ரவரி 2009 (UTC)

6 மில்லியன் யூதர்களைக் கொன்றவரை கொடுங்கோலன் என்பதும், மில்லியன் கணக்கில் பட்டிபோட்டு சாகடித்த ஸ்ராலினையும் கொடுங்கோலன் என்று விமர்சிப்பது தகுமே. அடிமைத்தனத்தை விரும்பிய நிறை அமெரிக்கர்கள் இருந்தார்கள் என்பதால் அடிமைத்தனம் நியாப்படுத்தப்படலாமா? --Natkeeran 17:26, 7 பெப்ரவரி 2009 (UTC)
நற்கீரன், எல்லா சூழல்களிலும் dictator என்பதற்குப் பொருந்துவதான சொல் தேவை. வல்லாளர் என்பது சரியாக வருமா? --இரவி 18:10, 5 சூலை 2011 (UTC)

கிட்லர் என்பதை விட இட்லர் கூடப் பொருத்தம்.--Kanags \உரையாடுக 12:24, 5 சூலை 2011 (UTC)

ஆம், சிறீதரன் கனகு சொல்வதை வழிமொழிகிறேன். இந்து, இந்தி, இமாலயம் போன்று இட்லர். சொல்வதும் எளிது, முழுவதும் தமிழ் முறைப்படியும் அமைந்துள்ளது. தமிழின் விதிகள் எளிமை நோக்கியும், தமிழுடன் இயல்பாய் இணங்கி வழங்கும் முகமாகவும் அமைக்கப்பெற்றவை. ஒலிப்புப்படி ஃகிட்லர் என்று வரும் (ஏறத்தாழ). --செல்வா 13:07, 5 சூலை 2011 (UTC)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இட்லர்&oldid=2013911" இருந்து மீள்விக்கப்பட்டது