பேச்சு:இட்டேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

What is wrong in this page?−முன்நிற்கும் கருத்து Sunjava6 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கிக் கொள்கைளின் படி காப்பபுரிமை பெற்ற கட்டுரைப்பகுதிகள் இருக்கலாகாது. கட்டுரையாளரின் பெயர் வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகியிருக்கும். எனவே கட்டுரைக்குள் தரக்கூடாது. இவற்றுக்கேற்ப கட்டுரைப்பக்கத்தை மாற்றியிருக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 21:56, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

இட்டேரி என்பது பாதையைக் குறிக்காது. இட்டு எரிக்கும் இடம் இட்டெரி. அதாவது சுடுகாடு. இது காரணப்பெயர். எனவே பல ஊர்களில் பெரும்பாண்மையாக இடுகாட்டிற்குச் செல்லும் பாதையை இட்டேரி சாலை என்றே குறிப்பர். மேலும் சிற்றூர்கள் பலவற்றில் ஏரியை ஒட்டி இப்பகுதி இருக்கும் எனவே இட்டேரி என அழைக்கப்பட்டது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:57, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஈரோட்டுப் பகுதியில் இட்டேரி என்பது வயல் அல்லது விளைநிலத்திற்குச் செல்லும் இருபுறமும் மரங்கள் உள்ள சாலையையே குறிக்கக் கண்டிருக்கிறேன். எனினும் இச்சொல்லின் மூலமும் பொருளும் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. --சிவக்குமார் \பேச்சு 22:11, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

நாமக்கல் பகுதியிலும் இட்டேரி என்பது இருபுறமும் மரங்கள் (முள் உள்ள மரங்கள்) உள்ள சாலையை குறிக்கும். இது மாட்டு வண்டி போகும் அளவு அகலமாக இருக்கும். சில சாலைகள் சிறிது அகலமாக இருக்கும். சில இட்டேரிகள் இடுகாட்டிற்கும் செல்லும் சாலையாக இருக்கும் ஆனால் அப்பகுதி விளைநிலங்களுக்கு (மேட்டாங்காடு) செல்லுவதே இதன் முதன்மையான பயன்பாடு--குறும்பன் (பேச்சு) 01:41, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இட்டேரி&oldid=1563000" இலிருந்து மீள்விக்கப்பட்டது