உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இடது இதயவறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித இதயம் தொடர்பான இந்தக் கட்டுரையில், மனித இதயத்தின் அமைப்பின் பெயர்கள் அதன் ஆங்கில ஒலிப்பு முறைக்கேற்ப வழங்கப்பட்டு அதன் பெயரில் கட்டுரைப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. நான் கற்றுக் கொண்டதன் அடிப்படையில், மனித இதயத்தின் பாகங்களுக்கு பொருத்தமான தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. இரு சோணை அறைகளும், அதற்குக் கீழாக இரண்டு இதயவறைகளும் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் இடது இதயவறை என்பதற்குப் பதிலாக, இடது வெண்ட்டிரிக்கிள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேடிப்பார்த்ததில், விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளிலும், சோணையறை மற்றும் இதயவறை ஆகியவற்றிற்காக இவற்றின் ஆங்கில ஒலிப்பு முறைச் சொற்களே கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இடது ஆரிக்கிள் (இதற்கு இடது ஏட்ரியம் என்றும் இணைத்தொடுப்பு வழங்கப்பட்டுள்ளது), வலது இதயம், இடது இதயம். அத்தோடு மனித இதய அமைப்பின் பல பகுதிகளுக்கும் அதனைக் குறிக்கின்ற வழக்கத்திலுள்ள தமிழ்ச் சொற்கள் கட்டுரைகளில் பாவிக்கப்படாமல் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரைகளில் இதய அமைப்புப் பகுதிகளுக்குச் சொல்கின்ற தமிழ்ப் பெயர்களை இணைத்து, பக்கத்தின் தலைப்புகளையும் அதன் பெயர்களில் உருவாக்குவது உசிதமானதென பரிந்துரை செய்கின்றேன். --தாரிக் அஸீஸ்  உரையாடுக  14:30, 13 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நல்ல பரிந்துரை தாரிக். வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களுக்கு அந்த கட்டுரைத் தலைப்புக்களை நகர்த்தலாம். முதலில் கட்டுரை எழுதிய பயனருக்கு அவை தெரியாமல் இருந்திருக்கலாம். --Natkeeran 03:44, 8 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், இலங்கையில் இடது இதயவறை என்பதே வழக்கத்தில் உள்ளது. ஆகவே, இடது இதயவறை என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாஹரன் (பேச்சு) 04:37, 10 மார்ச் 2012 (UTC)
பதிவுக்காக: தமிழ்நாட்டில் சோணையறை, இதயவறை என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அரசுப் பாடநூல்கள் முதலாக ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம், வெண்டிரிக்கிள் என்றே எழுதப்படுகிறது. --சிவக்குமார் \பேச்சு 06:09, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டு வழக்கு ஆங்கிலச் சொற்களின் ஒலிபெயர்ப்பாக இருக்கின்றது, அதேவேளை சிறிது உடற்கூறியலை ஆழ்ந்து கவனித்தால் இதயத்தில் auricle எனும் பாகமும் உள்ளது, அதுவே "சோணை" என்று அழைக்கத்தகுந்தது. இங்கு எல்லாமே இதயவறைகள்தாம், எனவே ventricle மட்டும் இதயவறை என அழைக்கப்படுவது சரியானதல்ல. atrium என்பதை மேல் இதயவறை என்றும் ventricle என்பதை கீழ் இதயவறை என்றும் அழைக்கலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 07:34, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

செந்தி கூறியிருப்பதே சரி எனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 08:49, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடது_இதயவறை&oldid=1140860" இலிருந்து மீள்விக்கப்பட்டது