பேச்சு:இசுலாமிய வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாம் என்ற கட்டுரையிலிருந்த வரலாறு உள்ளடக்கங்கள் இருந்தவாறே எந்த மாற்றமும் செய்யப்படாது வழி மாற்றப்பட்டுள்ளது. தகவல்களிலுள்ள குறைபாடுகள் ஒவ்வொரு பின்னர் வரிகளாக அடையாளப்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப்படும். --Mohamed S. Nisardeen 21:51, 7 மார்ச் 2009 (UTC)

இசுலாம் குறித்த வரலாறு நன்று. அது தோன்றுவதற்கு முன் இருந்த சமயம் அதிலிருந்து எப்படி மாறிற்று. அதற்கு முன வழிபட்ட இறைவன் குறித்த தகவல்களையும், சாத்தான் கல்லெறிதல், மெக்கா, மதினா, போன்ற விடயங்களையும் தந்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மொத்தத்தில் முழு வரலாற்றையும் மொழிபெயர்க்க முயற்சி செய்தால் நன்று. இவற்றை உங்களைப் போன்றோரைத் தவிர பிறரால் முடியாது. இவற்றை உருவாக்க மொழித் தடையாக உள்ளது. உண்மையில் இவற்றை அறிந்து கொள்ள ஆவல். அவ்வப்பொழுது விமர்சனங்கள் வரும் அதை தீர்த்துக் கொள்ளலாம். கட்டுரை வளரட்டும்--செல்வம் தமிழ் 10:35, 6 ஜூன் 2009 (UTC)

//முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அரேபிய தீபகற்ப்பம் முழுவதும் பரவியது. அவ்வாறு பரவிய அனைத்து இடங்களும் முகம்மது நபியின் ஆட்சியின் கீழ் வந்தது.// முகம்மது நபிகள் (சல்) அவர்களின் ஆட்சிப் பிடியில் வீழ்ந்த தேசங்கள் எங்கும், முகம்மது நபி (சல்) அவர்களால் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இஸ்லாம் பரவிய இடங்களும் முகம்மது நபி (சல்) அவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது என்பது எப்படி சாத்தியமானது.

இஸ்லாம் மதம் பரவிய நாடுகள் எல்லாம், அது பரவுவதற்கு முன்னரான காலக்கட்டத்தில் வெவ்வேறு மொழி பேசியவர்களும், வெவ்வேறு இறை நம்பிக்கைகள் உள்ளோரும் இருந்துள்ளனரே! அந்தந்தப் பகுதிகளில் வெவ்வேறு ஆட்சியாளர்களும் இருந்துள்ளனரே! அந்த ஆட்சியாளர்கள் எப்படி இஸ்லாம் பரவியது எனும் ஒரே காரணத்திற்காக முகம்மது நபிகள் (சல்) அவர்களிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்திருக்க முடியும்?

இஸ்லாம் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மதமானாலும், ஆட்சி அதிகாரங்களின் கீழ்தான் நிறுவப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரங்களில் உள்ளோரின் கூற்றுக்கு மாறான மத நம்பிக்கைகளை கொண்டோரை தண்டித்தும், கொலை செய்யப்பட்டதுமான வரலாறுகள் உள்ளனவே! --மொஹமட் ஹனீஃப் 10:00, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுலாமிய_வரலாறு&oldid=661868" இலிருந்து மீள்விக்கப்பட்டது