பேச்சு:இசுலாமிய நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசுலாமிய நாள்காட்டியில் வரும் மாதங்களை எசுப்பானியர் கீழ்க்காணுமாறு தருகின்றனர்:

 • Muharram
 • Safar
 • Rabi' Al-Awwal
 • Rabi' Al-Thani
 • Yumada Al-wula
 • Yumada Al-Thania
 • Rayab
 • Sha'aban
 • Ramadán
 • Shawwal
 • Du Al-Qa'dá
 • Du l-hiyya|Du Al-Hiyyá

இடாய்ச்சு மொழியில் கீழ்க்காணுமாறு தருகின்றனர்.

 • எசுப்பானியர் Yumada Al-wula என்பதை Dschumada l-ula என்கின்றனர்.
 • எசுப்பானியர் Yumada Al-Thania என்பதை Dschumada th-thaniyya என்கின்றனர்

நாம் தமிழில்,

 • சூமதா அல் அவ்வல் جمادى الاول (தமிழ் ஒலிப்பு choomadhaa al avval)
 • சூமதா அல் தானி جمادى الآخر أو جمادى الثاني ((தமிழ் ஒலிப்பு choomadhaa al thaani)

என்று சொல்லலாம் அல்லது எசுப்பானியர்போல் யூமதா அல் அவ்வல், யூமதா அல் தானி எனலாம். இவற்றுள்ளும் பிற வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரிகின்றது. சூமதா என்று எழுதலாமா (தமிழுக்கு அடுத்து அரபி எழுத்துக்களிலும் இருப்பதால் இது ஏற்புடையதாகா இருக்கும் அல்லவா?

--செல்வா 02:45, 27 செப்டெம்பர் 2010 (UTC)

அரபு மாதங்கள் - சந்திர நாட்காட்டி

முஹர்ரம் ஸபர் ரபீஃ அல்-அவ்வல் ரபீஃ அல்-தானி ஜுமாதா அல்-அவ்வல் ஜுமாதா அல்-ஆகிர் ரஜபு ஷஃபான் ரமழான் ஷவ்வால் துல்கஃதா துல்ஹிஜ்ஜா --பாஹிம் (பேச்சு) 03:01, 14 மார்ச் 2012 (UTC)

கிஞ்சுரா என்பது அரபி சொல்லான "ஹிஜிரி" என்பதை குறிக்கும். இது ஹிஜிரத் என்ற வார்த்தை இருந்து வந்ததாகும். இதன் பொருள் "இடம் பெயர்தல்" எனப்படும். முகம்மது நபி அவர்களும் அவர்களின் ஆதரவாலர்களும் சவுதி அரேபியாவின் மக்கா நகரை விட்டு மதினா நகருக்கு இடம் பெயர்ந்த ஆண்டு தான் முதல் கிஞ்சுரா ஆண்டு எனப்படும்.எனவே இசுலாமிய நாட்காட்டியை கிஞ்சுரா நாட்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 08:00, 5 மே 2014 (UTC)

அஃதென்ன கிஞ்சுரா? அறவே கேள்விப்படாத ஒரு பெயர். அதற்கு ஆதாரம் இருந்தால் தாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 13:24, 19 செப்டம்பர் 2015 (UTC)