பேச்சு:இசுலாமியத் தீவிரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஸ்லாமிய தீவிரவாதம் என்பது ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி குறியாக உள்ளது? இஸ்லாமிய தீவிரவாதம் என்பது என்பது கட்டுரையின் தலைப்பு ஆனால் ஆனால் இஸ்லாமோ குர் ஆன் அல்லது நபிகள் அவருடைய வழியோ தீவிரவாத செயல்களை ஒரு போதும் ஆதரிக்கவும் இல்லை இங்கு இருக்கக்கூடிய ஒரு சில குர்ஆன் வசனங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்கின்ற கோணம் உருவாகிறது இந்த தலைப்பின் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் பெயரால் சில சமூக விரோதிகள் செய்யும் தீவிரவாத செயல்கள் தானே ஒழிய இஸ்லாம் ஒருபோதும் இதை வலியுத்தவில்லை

தவறான விளக்கம்[தொகு]

இஸ்லாம் என்றால் என்னவென்று இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் குறிப்பிடுபவற்றை இஸ்லாம் கூறுவது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. கட்டுரையில் உலகம் முழுவதையும் இஸ்லாமியச் சட்ட ஆட்சியின் கீழ் கொண்டுவர வரம்பற்ற தாக்குதல்களை நடத்தலாம் என்பதே ஜிகாத் ஆகும் என பெர்னார்ட் லீவிஸ் (Bernard Lewis) கூறுகிறார். மேலும் அவர் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியர் அல்லாத மக்கள் அடிமை வரி செலுத்த வேண்டும் என்றனர் என்கிறார் என்ற வசனங்களின் மூலம் இஸ்லாத்தைப் பற்றித் தவறான கருத்து முன் வைக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வரவென வரம்பற்ற தாக்குதல்களை நடத்தலாமென்று இஸ்லாம் எங்கேயும் குறிப்பிடவில்லை. மாறாக, இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை (அல்-பகறா:256) என்றே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. மேலும், பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார் (அல்-மாஇதா:32) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. அடுத்தது, இஸ்லாத்தில் அடிமை வரி என்று எதுவுமில்லை. மாறாக, ஜிஸ்யா என்பது முஸ்லிமல்லாதோர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பாதுகாப்பு வரியாகும். அவர்கள் இஸ்லாமியப் படையிற் சேர்ந்து செயற்பட்டால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. எனினும், முஸ்லிம்கள் படையிற் சேர்ந்து செயற்பட்டாக வேண்டிய அதே வேளை, ஸக்காத் வரி செலுத்தியாக வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளனர்.--பாஹிம் (பேச்சு) 07:45, 23 சூன் 2014 (UTC)

பெரும்பாலான பகுதி செய்தித் தொகுப்பாக அமைகிறதே தவிர தீவிரவாதக் குழுக்கள் உருவாவதற்கான காரணங்கள், அவற்றை ஆதரித்து உருவாக்கும் அரசியல் கொள்கைகள் என்பது குறித்து தகவல்கள் இல்லை. மதத்தைக் காரணம் காட்டும் பகுதிகள் உள்ளனவே தவிர தவிர மதத் தலைவர்களின் கொள்கையுடன் முரண்படுகின்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலான தகவல்களைத் "தீவிரவாதம்" எனும் பொதுத் தலைப்பிற்கு நகர்த்தலாம். --Kuzhali.india (பேச்சு) 10:59, 5 அக்டோபர் 2014 (UTC)

இந்தக்கட்டுரை முற்றுமுழுதாக இஸ்லாத்தை அவமதிப்பதாகவே இருக்கின்றது. விக்கிபீடியா நடுநிலையாக செயற்ப்படுமாக இருந்தால் இங்கு உடனடியாக இந்தக்கட்டுரை நீக்கப்பட வேண்டும். இஸ்லாமிய தீவிர வாதம் என்பதை இஸ்லாமிய விரோதிகள் திட்டமிட்டு ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் என்பது இயல்பானது. அதில் இஸ்லாமியன் மட்டும் விதிவிலக்கானவன் அல்ல. ஒவ்வொருவரும் அவர்களின் கொள்கைகள் செயற்பாடுகள் அவர்களுடைய கருத்துக்கள் என்று அவர்களுடைய ஒவ்வொரு விடயங்களிலும் தீவிரவதிகளாகவே (தீவிரமாக) இருக்கின்றார்கள். அதே கொள்கையை இஸ்லாமியன் கடைப்பிடித்தால் அதற்கு இஸ்லாமிய தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. நான் மாற்று மதங்களை பெயர் குறிப்பிட்டு இழிவு படுத்த விரும்பவில்லை. அவ்வாறு தேவை இருந்தால ஒவ்வொரு மதத்தின் தீவிர வாதம் பற்றியும் இங்கு குறிப்பிடலாம். ஒன்றை மட்டும் கடைசியாக குறிப்பிடுகின்றேன். இஸ்ரேலால் முஸ்லிம்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் தீவிரவாதமில்லையா? தைரியமாக இஸ்ரேலியத்தீவிரவாதம் அமெரிக்கத்தீவிரவாதம் யூதத்தீவிரவதம் ...இப்படி உண்மையான தீவிரவாதத்தை எழுதுங்கள். அதேபோல் இஸ்லாத்தின் பெயரால் யார் யார் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றார்கள் . இவற்றுக்கு உண்மையான காரணங்கள் என்ன. உண்மையாக தீவிரவாதத்தை யார் தூண்டுகின்றார்கள். இவையெல்லாம் உங்களுக்கும் நன்கு தெரியும். இவ்வாறான உண்மைகள் தெரியாத அளவுக்கு முட்டள்களாக இங்கு பங்களிக்கும் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இது தவிர மற்ற மதங்களின் தீவிரவாதம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் மற்ற மதங்களுக்கு மதிப்பளிக்கின்றேன் அதனால் குறிப்பிடவில்லை. இது தான் எமக்கு இஸ்லாம் கூரித்தன்தது. மற்றவர்களுக்கும் நன்மையே நினைக்க கூறுகின்றது . இவற்றை எழுதுங்கள். மாறாக தமிழ் விக்கிப்பீடியாவை இஸ்லாத்திற்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டாம். இதை எத்தனையோ வளரக்கூடியவர்கள் வசித்தி தவறாக புரிந்து கொள்ளக்கூடும். இதுபோன்று நிறைய கட்டுரைகள் இங்கு இருக்கின்றன. அவற்றை நீக்குங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள். இஸ்லாம்க் காட்டித்தந்த முறையில் தாழ்மையாக கேட்கிகின்றேன்.--103.247.48.134 06:23, 11 சனவரி 2015 (UTC)