பேச்சு:இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சின்ட்ரோம் என்பதை அறிகுறித்தொகுப்பு என்று மொழிபெயர்ப்பது தகுமா அல்லது அறிகுறித்தொகுதி என்பது சரியாகுமா? -- Sundar \பேச்சு 06:04, 30 ஏப்ரல் 2007 (UTC)

சுந்தர், தொகுப்பு என்னும் சொல் சேர்ப்பு அவ்வளவு சரியாகப் படவில்லை. சின்ட்ரோம் என்பதில் நீங்கள் குறிப்பிடும் "தொகுப்பு" என்னும் கருத்து இருப்பினும், இங்கே தொகுப்பு என்றால் அறிகுறிகளின் பட்டியல் போன்ற தொகுப்பு என்னும் பொருள் பெற வாய்ப்புள்ளது. எனவே சின்ட்ரோம் என்பதற்கு அறிகுறிதி என்று கூறலாமோ என்று நினைக்கிறேன். அறிகுறிகளால் உணரப்படும் குறைபாடு/நிலைப்பாடு அறிகுறிதி. --செல்வா 14:24, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
தி என்ற ஒட்டு எதைக் குறிக்கும்? இவ்விடத்தில் அது பொருந்துமென்றால் பக்கத்தை நகர்த்தி விடலாம். -- Sundar \பேச்சு 12:17, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
சுந்தர், பெயர்ச்சொல் விகுதிகளில் தி என்பதும் ஒன்று. தொகு ->தொகுதி, பகு-> பகுதி என்பது போல், தொழுதி, வகுதி, கெடுதி, விடுதி, மிகுதி என்று பல சொற்கள் உள்ளன. மேலும் தேவைக்கு ஏற்றார்போல ஆக்கிக்கொள்ளலாம். பொதுவாக வினைச்சொல்லில் இருந்து ஆக்கப்படுவது இவை, எனினும் பொதி, மதி (மதிக்கப்படுவது என்னும் பொருளில் இறக்குமதி, ஏற்றுமதி) என்றும் சற்றே மாறான கோணத்திலும் சொற்கள் உண்டு. தமிழில் மிகப்பெரும்பாலான சொற்கள் வினைச்சொல் அடியில் இருந்து பிறப்பன, ஆனால் ஒரே வேர்ப்பொருளில் உள்ள ஒரு பெயர்ச்சொல்லில் இருந்து வேறு ஒரு பெயர்ச்சொல்லைப் பிரித்துக் காட்டவும் தி, னி போன்ற சொல்லிறுதிகள் பயன்படுத்தலாம். இயன்றபொழுது பின்னர் எழுதுகிறேன்.--செல்வா 12:34, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
விளக்கத்திற்கு நன்றி, செல்வா. வெளியூர் சென்றிருந்ததால் வரவில்லை, இன்றுதான் திரும்பினேன். விரைவில் பங்களிப்புத் துவங்கும். -- Sundar \பேச்சு 11:08, 13 ஆகஸ்ட் 2007 (UTC)

செல்வாவின் பரிந்துரையான அறிகுறிதி நன்றாகப் பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இப்போதைக்கு விக்சனரியின் கூட்டறிகுறி என்ற பரிந்துரைக்கேற்ப தலைப்பை மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 11:29, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

"Stockholm" என்பதை "சுடாக்ஹோம்" என்று எழுதுவதிலும் "இசுட்டாக்ஹோம்" என்று எழுதுவதே கூடுதல் பொருத்தமானது என்பது எனது கருத்து. -- மயூரநாதன் 05:21, 29 ஏப்ரல் 2011 (UTC)

ஆம் மயூரநாதன். இடையில் வருவதால் டகரம் இரட்டித்தால்தான் வலிந்து ஒலிக்கும். இந்த நகரின் பெயரை அவ்வாறுதான் ஒலிப்பர் என்றால் தயங்காமல் மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 07:40, 29 ஏப்ரல் 2011 (UTC)
இசுட்டாக்குஃகோம் கூட்டறிகுறி என மாற்றி விடலாமா? -- சுந்தர் \பேச்சு 06:27, 30 ஏப்ரல் 2011 (UTC)
மாற்றிவிடுங்கள் சுந்தர்.--Kanags \உரையாடுக 07:32, 30 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி, சிறீதரன், மயூரநாதன். மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 08:07, 30 ஏப்ரல் 2011 (UTC)