பேச்சு:இசுக்கை தொலைக்காட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@மதனாஹரன்: இசுகை தொலைக்காட்சி என பெயரிடலாமே. பொருத்தமாகவும், த.வி. கொள்கைக்கு உள்பட்டதாகவும் இருக்கும் என எண்ணுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 05:37, 3 பெப்ரவரி 2016 (UTC)

வல்லினத்திற்கு முன் ஸ் வந்தால் அதனை விட்டுவிட்டு எழுதுவது பொதுவான நடைமுறை (எ-டு: ஸ்தானம்-தானம், ஸ்தலம்-தலம், ஸ்தாபனம்-தாபனம்). இசுக்கை (k வருவதால் இரட்டித்து எழுதும்போதே அவ்வொலி வரும்) என எழுதுவதும் ஏற்புடையதே. --மதனாகரன் (பேச்சு) 05:54, 3 பெப்ரவரி 2016 (UTC)
நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் இதற்கு பொருந்தாது என எண்ணுகிறேன். கை தொலைக்காட்சி என குறிப்பது முற்றிலும் வேறு ஒரு பொருளைத் தருகிறது. இந்த (பெயர்ச்சொல்) எ.கா.களைக் காணுங்கள்: ஸ்டான்லி - இசுடான்லி, ஸ்காட்லாந்து - இசுக்கொட்லாந்து, ஸ்கைப் - இசுகைப் எனப் பல உதாரணங்கள் த.வி.யிலேயே உள்ளன.--சத்தியராஜ் (பேச்சு) 06:06, 3 பெப்ரவரி 2016 (UTC)
இசுக்கை எனச் சொல்வதும் ஏற்புடையதே. இசுக்காண்டியம் என்று சொல்வதைவிட, காந்தியம் என்பது எளிமையானது. Car என்பதைக் கார் என எழுதும்போதும் வேறு பொருள் வரத்தான் செய்யும். கூடாத பொருளாக இருந்தால் தவிர்க்க முயற்சிசெய்யலாம். --மதனாகரன் (பேச்சு) 06:10, 3 பெப்ரவரி 2016 (UTC)