பேச்சு:ஆஷிப்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷிப்தம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஆஷிப்தம், ஆக்ஷிப்தம் இரண்டில் எது சரி. இரண்டாவதே சரியென நினைக்கிறேன். எப்படியிருப்பினும், கிரந்தத் தவிர்ப்பு ஒப்பந்தப்படி ஆசிப்தம் அல்லது ஆக்சிப்தம் எனத் தலைப்பிடப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:04, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் கட்டுரையில் ஏறத்தாள அனைத்துக் கட்டுரைகளுமே கிராந்தகத்துடன் தான் எழுதப்பட்டிருக்கும். அவற்றினை சரியான பெயருக்கு மாற்ற உதவுங்கள் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:42, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் தரவில்லை. ஆஷிப்தமா ஆக்ஷிப்தமா சரியானது?--Kanags \உரையாடுக 11:58, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
கர்ண வகைகளின் பட்டியலில் ஆக்ஷிப்தம் என்று குறிப்பிட்டிருந்தது. ஆஷிப்தம் என்ற சொல்லை விளக்கத்தினை தருகையில் அடியார் பயன்படுத்தியிருந்தார். சிவதாண்டவங்களை எழுதும் பொழுது அவற்றையே பின்பற்றி பெயரிட்டுள்ளேன். படத்தில் ஆக்ஷிப்தம் என்றே குறிப்பு இருந்தது. எது சரியென நானறியேன். தாங்கள் எப்படியிருப்பினும் என்ற வார்த்தையை உபயோகம் செய்திருந்ததால் அதனை பெரியதாக கருதாமல் விட்டுவிட்டேன். :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:04, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஆக்ஷிப்தம் என்பதே சரி. இது பற்றி எழுதுகின்றேன். ஆக்ஷிப்தரேசிதம், ஆக்ஷிப்தகம் என்றெல்லாமும் உண்டு. --செல்வா (பேச்சு) 21:57, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஆக்ஷிப்தம் என்பது கைகளியோ கால்களையோ விரைவாக பின்பக்கமாகவோ பக்கவாட்டிலோ அசைப்பது/ஆட்டுவது. விக்ஷிப்தம் என்றால் கைகளையும் கால்களையும் ஒரே ஒழுக்கத்தில் பின்நோக்கியோ பக்கவாட்டிலோ வீசி நீட்டுவது. பொதுவாக ரேசித என்றால் உயர்த்துதல், கைகளையோ கழுத்தையோ உயர்த்துதலுக்கு ரேசித என்பார்கள். ஆக்ஷிப்தரேசிதம் என்பது கைகளை உயர்த்தி குறிப்பிட்ட சில வகைகளைல் அபிநயங்கள் பிடித்துச் செய்வதாகும். இதன் தேவநாகரி வடிவம் आक्षिप्त. கொடிகளைத் தொங்கவிட்டால் அசைவது போல் என்பது பொருள் (இங்கே). பிற பொருள்கள் 'விலகிப் போதல்' 'வழி தவறுதல்' , 'மறந்து போதல்' என்பன. --செல்வா (பேச்சு) 22:27, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
கிரந்தம் விலக்கி எழுதுவதானால் ஆட்சிப்தம் என்று எழுதலாம். இலட்சுமி என்று எழுதுவது போல். தமிழ்நாட்டில் வழங்கிய தமிழ் மொழியில் வழங்கிய நடனக் கலைச்சொற்கள் பரத சாத்திரத்தால் சமற்கிருதம் வழியாக வருகின்றன.--செல்வா (பேச்சு) 22:30, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள படம் சரியான படமா? உறுதி செய்ய வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 22:36, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
இந்த தாண்டவத்திற்குறிய படம் [1]. சந்தேகமில்லை. இந்த 108 தாண்டவங்களின் பலவற்றில் இவ்வாறு புரியாத சொற்கள் உள்ளன. அவற்றை தமிழ்ப்படுத்துதலும், எளிமைப்படுத்துதலும் சாத்தியமாகுமென்றால் நேரமிருக்கும்பொழுது உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:14, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]
செகதீசுவரன், அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில் இதில் இன்னமும் பெரும் குழப்பம் உள்ளது. முனைவர். பத்மா சுப்பிரமணியம் அவர்கள் அடையாளப்படுத்தியது தவறு என்று பலர் கூறுகின்றார்கள். இந்த ஆங்கில விக்கிக் கட்டுரையில் பாருங்கள். "Some other Bharatanatyam gurus, such as Adyar Lakshman (Kalakshetra school) as well as the Kuchipudi gurus Vempati Chinna Satyam and C.R.Acharya have also attempted to reconstruct all the 108 karanas, which were often significantly different from Padma Subrahmanyam's interpretations so much so that even on the chari (leg movement) level there was no agreement as to whose interpretation is correct. Due to the significant variations in the depictions, most traditional Bharatanatyam schools considered Padma Subrahmanyam's style which incorporated Karanas as incorrect, which forced her to name her own style as Bharatanrityam rather than Bharatanatyam. " ஆக புதிதாக முனைவர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் கொண்டுள்ள 'பரதநிருத்திய'த்துக்கு வேண்டுமானால் இது சரியானதாக இருக்கலாம். பரதநாட்டியம் வேறு பரத நிருத்தியம் வேறு என்று பொருள் கொள்ள இடம் உண்டு. என்னிடம் உள்ள நூலில் ஒன்றிலும் இந்தக் கரணம் வேறு விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எது சரி என்று நாம் முடிவெடுக்க வேண்டாம், ஆனால் கருத்து வேறுபாடு உள்ளது என்றும் இவை உறுதிசெய்யப்பட்டதாகக் கூற முடியாது என்றும் கூறலாம்.--செல்வா (பேச்சு) 22:10, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]
தாங்கள் கூறுவது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. தாண்டவங்கள் வரையறுக்கப்பட்டதில் இத்தனை பிரட்சனைகள் உள்ளதென நான் அறிந்ததில்லை. நூற்றியெட்டு கரணங்கள் என்ற ஒன்று உண்டு, அதை சிவபெருமான் ஆடி மற்றவர்களுக்கு நடனத்தினைக் கற்பித்தார் என்பதை அறிந்து, இணையத்தில் கிடைத்த சில தகவல்களை இங்கு தந்துள்ளேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளவைகளை பற்றி தெளிந்த துறையறிவு நிரம்பியவர்களே எழுத இயலும். எனவே இந்தப் பொறுப்பினை தாங்கள் ஏற்று கொள்ள வேண்டுகிறேன். சரியான நூல்கள் இணையத்தில் கிடைக்கும் பட்சத்தில் தாண்டவங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை இணைக்கிறேன். பணிசுமையை அதிகரித்தமைக்கு மன்னிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:45, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆஷிப்தம்&oldid=1450049" இலிருந்து மீள்விக்கப்பட்டது