பேச்சு:ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Alfred என்பது எப்போதுமே ஆல்பிரட் (தமிழக வழக்கு), அல்லது அல்பிரட் (ஈழ வழக்கு) என்றே ஆண்டாண்டுகாலமாக எழுதப்பட்டு வந்துள்ளது. ஆல்ஃவிரட் தேவையற்றது. வழிமாற்றாக மட்டுமே கொடுக்கத்தக்கது.--Kanags \பேச்சு 08:03, 12 டிசம்பர் 2008 (UTC)

ஆல்பிரட் என்றே மாற்றிவிடுங்கள் கனகு. என் நினைப்பு ஆல்'விர'ட் என்பதே, ஆனால் அதனை ஏற்கும் நாள் வராமலே போகலாம். வேற்றொலிகளைத் துல்லியமாகத் தமிழில் குறிக்க வழி இருந்தாலும், அதனால் தமிழ் ஒலிப்பு மாறும். எனவே கவலைகள் உண்டு. மாறினால் என்ன? மாற்றம் இயற்கைதானே என்ற நினைப்புகளையும், அவற்றின் கருத்தோட்டங்களையும் அறிவேன். தமிழ் ஒலிப்பின் இனிமை குன்றும் என்பது மறுக்கொணா உண்மை.--செல்வா 11:12, 12 டிசம்பர் 2008 (UTC)
செல்வா, தமிழ் ஒலிப்புமுறையைப் பற்றிப் படித்தபின் உங்களுக்கு ஏற்பட்ட அதே அச்சம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மாற்றங்கள் ஏற்படுகையில் அவை புதிய இலக்கணம் ஒன்றின்படி அமையும். அதை ஆய்ந்து புதிய இலக்கண நூல் ஒன்று உருவாகக் கூடும். பார்ப்போம். இருப்பினும் உங்கள் திரிபுக்குறியீட்டு முறையை புழக்கத்தில் விட்டுப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. வியட்நாம், நிப்பான் போன்று அரசு ஆதரவு கிடைத்தால் இம்முறை நிலைக்கலாம். இல்லாவிட்டாலும் நம் காலத்துக்குள்ளாக தொல்காப்பியத்தை முறையாக ஆவணப்படுத்தியும் ஒலிப்புமுறை முதலான சிறப்புக்களை ஆய்வுக் கட்டுரைகளில் பதியவும் வேண்டும். பின்னாளில் கிரேக்கத்தை ஆய்வது போல் பழந்தமிழின் சிறப்புகளையும் மக்கள் ஆய்ந்தறியக் கூடும். தமிழ் வேறு வடிவில் என்னாளும் உய்த்திருக்கும். -- சுந்தர் \பேச்சு 16:46, 12 டிசம்பர் 2008 (UTC)