பேச்சு:ஆல்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்பொனைல் என்றால்தானே carbonyl என்றும் ஃபோர்மைல் என்றால் formyl என்றும் புரியும்! காபொனைல், ஃபோமைல் என்பது போன்று எழுதினால் புரிந்துகொள்வது கடினமாயுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:56, 4 ஆகத்து 2012 (UTC)

எமக்கு இலங்கையில் இப்படித்தான் சொல்லித்தந்தார்கள். அதன்படியே நானும் எழுதுகிறேன். அதனால் நீங்கள் விரும்பினால் அப்படியே மாற்றுங்கள்(குறிப்பு: இலங்கையில் பெரும்பாலும் ஆங்கில உச்சரிப்பில் r ஐ உச்சரிப்பதில்லை)--பிரஷாந் (பேச்சு) 16:07, 4 ஆகத்து 2012 (UTC)

இவ்வாறு எழுதினால் மக்கள் புரிந்து கொள்வார்களா என்றே ஐயுற்றேன். carbon என்பதை உச்சரிப்பு வழியில் காபன் என்று எழுதுவதைவிட, கார்பன் என்றெழுதினால் இன்னும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும் என்று கூறினேன். இக்கட்டுரையில் உள்ளது போலவே எல்லா இடங்களிலும் மறவாது ஆங்கிலப் பெயர்களைச் சேருங்கள். தங்கள் கட்டுரையில் நான் மாற்றுவது சரியல்ல. தங்கள் கருத்தை ஏற்ற்குகொண்டேன். இருப்பினும், இன்னுமொருவர் விளக்கினால், மகிழ்வேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:33, 4 ஆகத்து 2012 (UTC)

  • இதில் ஒரு சின்ன சிக்க இருக்கின்றது. கார்பன் என்ரு தமிழகத்திலே சொல்வதை இலங்கையில் காபன் என்கின்றனர். பொதுவாக நாம் தமிழில் (இலங்கை ஆயினும் தமிழ்நாடாயினும், மலேசியா, சிங்கப்பூர் ஆயினும்) ஒலிபெயர்த்துத்தான் எழுதுகின்றோம். ஆங்கிலத்திலே ஒரு சொல்லை வெவ்வேறு விதமாக ஒலிக்கின்றனர். methyl , ethyl என்பதை மெத்தில், எத்தில் என்றும் மீத்தைல், ஈத்தைல் என்று ஒலிக்கின்றனர். இதெ போல கார்பன் (carbon) என்பதில் உள்ள ஆர் (r) என்னும் எழுத்தை முற்றிலுமாய் விடுத்தும் நுட்பமாய் ஒலித்தும் கேட்க இயலுகின்றது. carbonyl என்பதை வெபுசிட்டர் அகரமுதலில் \ˈkär-bə-ˌnil, -ˌnēl\ என்றும் கார்பன் (carbon) என்பதை \ˈkär-bən\ என்றும் ஒலிப்புக் குறிப்புகள் இட்டுக்காட்டுகின்றது. ஆனால் பிரித்தானிய ஒலிப்பு காபன் என்பது போன்றதே. ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி "Brit. /ˈkɑːbən/ , U.S. /ˈkɑrbən/ " என்று குறிப்பிடுகின்றது. எனவே கார்பன், காபன் ஆகிய இரண்டுமே சரியான ஒலிப்புகள்தாம். carbonyl என்பதற்கும் ஆக்ஃசுபோர்டு அகரமுதலி Brit. /ˈkɑːbənʌɪl/ , /ˈkɑːbənɪl/ , U.S. /ˈkɑrbəˌnɪl/ எனக் காட்டுகின்றது. இதில் முடியும் ஒலியும் -ஐல், -இல் என பிரித்தானியரே இரு வகையாக ஒலிப்பர். இப்படியான சூழல்களில் எல்லாம் தமிழில் இவ்வாறு வழங்கவேண்டும் என ஒரே ஒரு முறையைக் கையாண்டால் நல்லது. formyl என்பதற்கு ஆக்ஃச்சுபோர்டு அகரமுதலி /ˈfɔːmɪl/ என்னும் ஒரே ஒலிப்பைத்தான் தருகின்றது. ஃபோமில் (ஃபோமைல் அன்று). ஆனால் வெபுசிட்டர் அகரமுதலில் \ˈfȯr-ˌmil\ எனத் தருகின்றது. ஃபோர்மில். நாம் இடையே ரகரம் இட்டு எழுதுவது நல்லது (தமிழ்நாட்டு வழக்கம் என்பதற்காகச் சொல்லவில்லை, அமெரிக்க வழக்கம் என்பதற்காகச் சொல்லவில்லை, எழுத்துத்தொடர்பை எங்கெல்லாம் சுட்ட இயலுமோ அங்கெல்லாம் சுட்டலாம். மேலும் எல்லாஇடத்திலும் ஒரே சீராக எழுதுவதும் மிகவும் தேவை). ஆங்கிலத்திலே Carbon Dioxide என்று எழுதினாலும் தமிழில் எழுதும்பொழுது கார்பன்-டை-ஆக்சைடு என்று இடைக்கோடு இட்டு எழுதுவது நல்லது. Dioxin என்பதை டை-ஆக்சின் என்றும் எழுதுவது நல்லது (டையாகிசின் என்று எழுதுவதைவிட). Sulfur hexafluoride ஐ சல்ஃபர்-எக்சா-புளோரைடு என்றோ கந்தக-எக்சா-புளோரைடு என்றோ எழுதுவது நல்லது. கந்தகம் என்று சொல்வதால் பிழை இல்லை. எக்ஃசா அல்லது எக்சா அலல்து ஃகெக்சா என்று சொல்வதில் பிழை இல்லை (exa என்று இன்னொரு எண்ணுப்பெயர் உள்ளதென்பதை அறிவேன். ஆனால் குழப்பம் வராது வேதியியல் பெயரில்). எது எப்படி ஆயினும், சீர்மை பேணுவது, அல்லது கூடிய அளவு சீர்மை பேணுவது மிக மிக முக்கியம். இதே கந்தக-எக்ஃசா-புளோரைடை இடாய்ச்சு மொழியர் Schwefelhexafluorid என்றும், இத்தாலியர் Esafluoruro di zolfo என்றும், எசுப்பானியர் Hexafluoruro de azufre என்றும் வெவ்வேறு விதமாகவே கூறுகின்றனர். எனவே கந்தக-எக்ஃசா-புளோரைடு என்றால் பிழை இல்லை. ஆனால் இவற்றை ஒரே சீராக வழங்கல் நலம்.--செல்வா (பேச்சு) 16:38, 4 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆல்டிகைடு&oldid=2516441" இருந்து மீள்விக்கப்பட்டது