பேச்சு:ஆலப்புழா மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலப்புழா மாவட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர் குறித்தவை[தொகு]

இதன் பெயர் ஆலப்புழா இல்லையா..? --மது 04:35, 30 மார்ச் 2007 (UTC)

ஆம். நீங்கள் சொல்வது சரிதான். நகர்த்தி விடுகிறேன்.--Sivakumar \பேச்சு 04:59, 30 மார்ச் 2007 (UTC)
புழ என்பது ஆற்றைக் குறிக்கும் சொல். ’புழ’ என்பதே சரி. சொல்லின் இறுதியில் வரும் ’அ’கரத்தை ’ஆ’கரமாக்கி உச்சரிப்பது வழக்கம். இது சமசுகிருதச் சொற்களுக்கு மட்டும் பொருந்தும் என கேள்விப்பட்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, சந்திரிக என்று எழுதி, சந்திரிகா என்று உச்சரிப்பர். இறுதியில் வரும் எழுத்தை மெய்யெழுத்தாக, இந்தியில் படிக்க வேண்டியுள்ளதால், அண்மைக்காலத்தில் ’ஆ’கரமாக்கி படிக்கும் வழக்கம் வந்திருக்கலாம். (ஆலப்புழ என்பதை இந்தியில் ஆலப்புல் என்று படிக்க வேண்டியிருக்கும்.) அதனால் இந்த மாற்றம் வந்திருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி, சொல்லின் இடையில் ’புழ’ என்ற சொல் வந்தால், அப்படியே உச்சரிக்கப்படும், ’புழா’ என்று உச்சரிக்கப்பட மாட்டாது. சொல்லின் இறுதியெழுத்திற்கு மட்டும் இந்த விதி பொருந்தும். தமிழில் உள்ள பல சொற்கள் ஐகாரம் கெட்டு மலையாளத்தில் புழங்குவதால், அத்தகைய தமிழ்ச் சொற்களுக்கு சமசுகிருதத்திற்கான ’ஆ’ விதியை புழங்க வேண்டியதில்லை. அவற்றை தமிழுக்கு ஏற்ப ஐகாரம் சேர்த்து எழுதுவது பொருத்தமாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:25, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]