பேச்சு:ஆரவல்லி மலைத்தொடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரவல்லி மலைத்தொடர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

தெலுங்கு விக்கியில் ஆராவளி என்று இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மராட்டி மற்றும் குஜராத்தி விக்கிப்பீடியாக்கள் இதை அரவல்லி என குறிப்பிடுகின்றன வினோத்ラージャン 18:28, 6 ஜூன் 2008 (UTC)

ஹிந்தியில் அராவலி என்றுதானே இருக்கிறது. மயூரநாதன் 18:32, 6 ஜூன் 2008 (UTC)
குஜராத்தின் அருகில் உள்ள நிலையில் குஜராத்தியர்கள் இதை அரவல்லி என்றே அழைக்கின்றனர்.ராஜஸ்தானி மொழியில் எவ்வாறு அழைக்கின்றனர் என தெரியவில்லை. மேலும் குஜராத்தியில் உயிரெழுத்துக்களின் மாத்திரை அளவு வேறுபாடுகள் மறைந்த நிலையில், தமிழில் வழங்கி வரும் ஆரவல்லி என்பதே சரியாக தோன்றுகிறது. எனது அம்மாவின் பாடபுத்தகங்களிலும் ஆரவல்லி என பார்த்ததாக நினைவு, சரியாக ஞாபகம் இல்லை. வினோத்ラージャン 18:43, 6 ஜூன் 2008 (UTC)


தமிழக பாட நூல்களில் ஆரவல்லி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரவல்லி மலைத்தொடர் என்று இதன் தலைப்பை மாற்றலாம் என்பது என் கருத்து. --குறும்பன் 00:26, 7 ஜூன் 2008 (UTC)

ஆரவல்லி என்ற பெயரில்தான் இக்கட்டுரையை முதலில் எழுதினேன். பின்னர் ஹிந்தியில் தலைப்பைப் பார்த்தபின் புதிய தலைப்புக்கு மாற்றினேன். தமிழில் பேச்சு வழக்கில் எப்படிக் குறிப்பிடுகிறார்கள்? மயூரநாதன் 03:33, 7 ஜூன் 2008 (UTC)

இது வட இந்திய மலைத்தொடரானதால் அதிகம் மக்களிடம் புழங்கவில்லை, ஆனால் நாளிதழ்களில் ஆரவல்லி என்று தான் குறிப்பிடுகிறார்கள். மக்களும் அவ்வாறே புழங்குகிறார்கள் --குறும்பன் 03:46, 7 ஜூன் 2008 (UTC)

தலைப்பு ஆரவல்லி என மாற்றப்பட்டுள்ளது. மயூரநாதன் 04:19, 7 ஜூன் 2008 (UTC)