பேச்சு:ஆய்கென் வொன் பொம் போவர்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Eugen என்ற பெயாரை ஆய்ஜென் என்று உச்சரக்க வேண்டுமென இங்கு போட்டிருக்கிறதே. நான் சில படங்களில் யூகென் (யூ-டி-கலோன் போல) உச்சரித்து கேட்டுள்ளேன். ஒருவேளை நாட்டுக்கு நாடு மாறுமோ?--சோடாபாட்டில் 04:08, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

Eugen என்பது ஒரு பொதுப் பெயர். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக உரைக்கப்படுகிறது. ஆய்ஜென், யூஜின், எவ்கேனி (இரசிய மொழி). செருமன் மொழியில் எவ்வாறு பலுக்கப்படுகிறது என்பது செல்வாவுக்குத் தெரிந்திருக்கலாம். ஈயின் என்று இக்கட்டுரையில் உள்ளது தவறாக எனக்குப் படுகிறது. ஒரு வேள கிரந்தம் தவிர்ப்பதற்காக இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்.--Kanags \உரையாடுக 04:28, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஜெர்மானிய பெயர் என்றால் ”ஆய்கென்” ('Oygen' /ɔjgɛn/.) என்று உச்சரிக்க வேண்டுமாம். ஆய்லர் போல என்று நினைக்கிறேன். ஆய்கென் என்றே மாற்றி விடலாமா?--சோடாபாட்டில் 08:35, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
கிரந்தக் குழப்பமும் இல்லை. அப்படியே மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 08:40, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில் சொன்னவாறு ஆய்கென் என்று ஒலிக்க வேண்டும். ஆங்கில J ஒலி கட்டாயம் வராது. ஏனெனில் அது இடாய்ச்சு மொழியில் இல்லை. அவர்கள் ராமானுயன், யாப்பான் என்றே கூறுவர். அவர்கள் மொழிப்பெயராகிய Deutsch என்பதில் வருவது போல eu என்னும் எழுத்துக்கூட்டல் ஆய் அல்லது ஒய் என்பதுபோல ஒலிக்கும் (இரண்டிற்கும் இடைப்பட்டாற்போல என்றும் சொல்லலாம்). இப்பொழுது இருக்கும் தலைப்பு சரியே--செல்வா 11:48, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா--சோடாபாட்டில் 11:51, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]