பேச்சு:ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மாற்றுவதற்கு முன் உரையாடல் பக்கத்தில் உரையாடி முடிவெடுத்திருக்கலாமே. :( .--ஆர்.பாலா (பேச்சு) 06:38, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சூரா-இ நாநஎடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் இது நீங்கள் கொடுத்த தலைப்பு. இதனை "ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு" என்றில்லாமல் வேறு எவ்வாறு மொழிபெயர்க்கலாம்? வேறு நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் தாருங்கள்.--Kanags \உரையாடுக 06:42, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நான் சொன்னது தலைப்பை மாற்றுவதற்கு முன் உரையாடியிருக்கலாம் என்பதே. நீங்கள் இப்போது வந்து புதிய தலைப்பைத் தாருங்கள் என்கிறீர்கள். மேலும் நான் கொடுத்திருந்த தலைப்பு ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தான் ஆகும். சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கிரந்தச் சொற்கள் பயன்பாடு பற்றி இன்னும் திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்படாத போது அதை மாற்றுவதற்கான தேவையும் புரியவில்லை. எல்லோருக்கும் தமிழ்ப் பற்று இருக்கிறது என்பதையும் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். உரையாடல் பக்கத்தின் நோக்கமே இப்படியான குழப்பங்களுக்கு வழி தேடுவதுதான். மேலும் சில மொழி பெயர்ப்புகள் யதார்த்தத்தைவிட்டு விலகியிருப்பதை நீங்கள் உணருகிறீர்களா எனத் தெரியவில்லை. உதாரணமாக திரவ உந்துகை அமைப்பு மையம் இக்கட்டுரையைப் பாருங்கள். அந்த நிறுவனம் தன்னை திரவ இயக்கத் திட்ட மையம் என்றே சொல்லிக் கொள்கிறது. நடைமுறை யதார்த்தம் தெரியாத நிலையில் செய்யும் மாற்றம் எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை உணரவே இந்த உதாரணம். Buddha Collapsed out of Shame பேச்சுப் பக்கத்தில் உரையாடியிருக்கிறோம். மூல மொழியின் பெயரையே வைக்கலாம் என. ஆனால் ஆனால் இங்கே மூல மொழியின் பெயரை கிரந்த எழுத்துகளை நீக்கி சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானித்தான் என வைத்திருந்தாலாவது பரவாயில்லை. அதன் மொழிபெயர்ப்பான ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு எந்த அளவுக்கு உதவக்கூடும் எனத் தெரியவில்லை. மேலும் விக்கியின் கட்டுரைகள் மக்களின் பயன்பாட்டிற்குத்தானே அன்றி நம் தூய தமிழ்ப் புலமையையை நிறுவ அல்ல என நினைக்கிறேன். இத்தகைய தான் தோன்றித்தனமான முடிவுகள் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றன. உங்களுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் நீங்கள் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தாமல் எழுதலாம். ஆனால் பிறரின் கட்டுரைகளின் கிரந்த எழுத்துகள் தொடர்பாக அல்லது தலைப்பின் மொழி பெயர்ப்பு தொடர்பாக உரையாடல் பக்கத்தில் உரையாடலாமே? தமிழ் விக்கியின் சில திருத்தங்கள் வட்டாரச் சொற்களை முதன்மைப்படுத்துகிறது. மேலும் ஒரு உதாரணம் அல் காயிதா எனும் பக்கம் அதன் மூல மொழி உச்சரிப்பிலேயே இருக்கிறது. இன்னும் மொழிபெயர்க்கப்படாமலேயே உள்ளது.--ஆர்.பாலா (பேச்சு) 02:49, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இது தலைப்பு மாற்றம் பற்றிய உரையாடல். இங்கே கிரந்தம், தமிழ்ப் பற்று மற்றும் தான் தோன்றித்தனம், கண்டனம் போன்ற சொற்களின் பாவனை என்பவற்றைத் தவிர்த்து உரையாடலாம். நீங்கள் Revolutionary Council of Islamic Unity of Afghanistan என்ற கட்டுரையினை மொழி பெயர்த்துள்ளீகள். ஆகவே அதற்கான மொழிபெயர்ப்பு ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு என்றிருப்பதில் தவறென்ன? ஆ.வி.யில் "Shura-i Engelab-i Ettefaq-i Islami Afghanistan" என்றுதான் தலைப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துப் பாருங்கள். மேலும், ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தான் என்ற தலைப்பு வழக்கில் இருக்குமானால் வழிமாற்றக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:59, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நல்லது. தாங்கள் முழுவதும் படித்தீர்களா எனத் தெரியவில்லை. 1)கிரந்தம் தொடர்பான மாற்றங்களின் படியே இக்கட்டுரையின் தலைப்பு "ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தான்"லிருந்து சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டது. 2) உரையாடல் பக்கத்தில் கருத்து எதுவும் சொல்லாமல் தானாகவே மாற்றுவதற்கு வேறு என்ன தமிழ் சொல்லைக் குறிபிட வேண்டும் எனப் பரிந்துரையுங்கள். 3) பேச்சு:புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்) பக்கத்தினைப் பாருங்கள். 4) ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு என இருப்பது சரியெனில் அல் காயிதா வைத் திருத்துங்கள். --ஆர்.பாலா (பேச்சு) 04:49, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
எப்போதும் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள். சூட்டல் என்பதையும் ஸூட்டல் என்பதையும் ஒலித்துப் பாருங்கள் என்று தான் சொன்னேன். ஒரே போலவா ஒலிக்கிறது?.--ஆர்.பாலா (பேச்சு) 07:54, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]


கருத்து எதுவும் சொல்லாமல் தானாகவே மாற்றியதில் பிழை எனில் இங்கு குறிப்பை இட்டு பயனர் பக்கத்தில் வன் சொல் தவிர்த்து கருத்தினை முன் வைக்கலாம். தலைப்பு பிழையெனில் இங்கு தலைப்பு மாற்றக் போரிக்கையை முன்வைக்கலாம். மாற்றிய தலைப்பு சரியெனின் உங்கள் கருத்து வலுவிழந்துவிடும். மேலும் சிக்கலற்ற தலைப்பு மாற்றங்கள் தானாகவே மாற்றப்படும் எழுதப்படாத நடைமுறை இங்குள்ளது. அது பிழையெனில் அதுபற்றி உரையாடி தீர்க்கமான முடிவை எடுக்கலாம். Al-Qaeda, Revolutionary Council of Islamic Unity of Afghanistan ஆகிய கட்டுரைகள் ஆங்கில விக்கியில் பயன்பாடு நிமித்தம் தலைப்பிடப்பட்டதைக் கவனியுங்கள். நீங்கள் இங்கு கேட்டது போன்று அங்கு "Al-Qaeda"வை "The Base" என்று தலைப்பிடச் சொல்ல முடியுமா என்பதையும் கவனியுங்கள். உங்கள் ஏரணப்படி, தமிழ் இயக்கமான த.வி.பு.கள் அங்கு Liberation Tigers of Tamil Eelam என்பதற்குப் பதில் Tamiḻīḻa viṭutalaip pulikaḷ என்றல்லவா இருக்க வேண்டும்? --Anton·٠•●♥Talk♥●•٠· 06:13, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
//"ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தான்"லிருந்து சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டது// உண்மை, ஏனெனில், ஆப்கானிஸ்தான் என்பதை ஆக்பானிஸ்தான் எனத் தவறாக எழுதியிருந்தீர்கள் என நினைத்தேன் (அல்லது ஆக்பானிஸ்தான் சரி தானா?, தாரி மொழியில் அவ்வாறு தான் எழுதுகிறார்களா?) ஸூரா என்பதை ஏன் தமிழில் எழுத முடியாது? சூரா, ஸூரா இரண்டும் ஒரே மாதிரியான ஒலிப்புத் தான் என்பதை நீங்கள் உணரவில்லையா? கிரந்தம் முழுமையாகத் தவிர்ப்பது என்பது விக்கிப்பீடியாவில் கொள்கை இல்லை. ஆனால் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். அதனாலேயே முதலில் ஒரு வழிமாற்றுக்காக சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டது. பின்னர் இரண்டாவது பிரச்சினை. தலைப்பு பின்னர் அதே நிமிடத்தில் ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு எனச் சரியாக மாற்றப்பட்டது? சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் என வாயில் வராத பெயர்களை எல்லாம் நாம் இங்கு தர வேண்டுமா? மிகவும் பொதுவாக அறியப்படுகிற சூரா எனப் பெயரிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆங்கில விக்கியில் நோட்டம் விட்ட போது அவர்கள் Shura-i Engelab-i Ettefaq-i Islami Afghanistan என்ற பெயர் பொதுவான வழக்கிலில்லாத பெயர் என்பதானாலோ என்னவோ அவர்கள் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையே தலைப்பாகத் தந்திருந்தார்கள். பலத்தீன விடுதலை இயக்கத்தை நாம் முனஸ்ஸமாத் அத்-தாஹீர் அல்-ஃபிலஸ்தீனிய்யா என எழுதினால் ஒப்புக் கொள்வீர்களா?--Kanags \உரையாடுக 06:54, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
கருத்து எதுவும் சொல்லாமல் தலைப்பை மாற்றியது பிழை எனத் தோன்றியதால்தான் முதலில், "தலைப்பை மாற்றுவதற்கு முன் உரையாடல் பக்கத்தில் உரையாடி முடிவெடுத்திருக்கலாமே. :( " எனக் கேட்டிருந்தேன். பேச்சு:புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்) பக்கத்தைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மூலமொழியை அவ்வாறே தமிழில் எழுதலாம் என கூறியுள்ளதைப் படித்திருப்பீர்கள். அதை ஒட்டியே புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் என்ற தலைப்பு வைக்கப்பட்டது. அதே நடைமுறையைப் பின்பற்றி இங்கே ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தான் என்றோ அல்லது கிரந்தம் தவிர்த்து சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் என்றோ வைப்பது என்ன தவறு. உரையாடல்கள் மூலம் அனைத்தையும் தீர்க்கலாம் என நம்புகிறவன் நான். மற்றபடி வன்சொற்கள் எதையும் உள்ளர்த்தத்தோடு பயன்படுத்தவில்லை. எல்லாவற்றிலும் ஆங்கில விக்கியின் நடைமுறைகளைப் பின்பற்றக் கூடாது என்று முன்பொருமுறை யாரோ சொன்ன ஞாபகம். இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் பாருங்கள். இதை முன்னுதாரணமாகக் கொண்டு இரு மொழிகளிலும் தலைப்பிட முடியுமா? பலமுறை கேட்டு பதில் கிடைக்காத கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், தமிழ் விக்கியின் பெயரிடல் தொடர்பான தெளிவான கொள்கை என்ன என்பதைப் பற்றிய இறுதி முடிவு இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 07:00, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
///ஆப்கானிஸ்தான் என்பதை ஆக்பானிஸ்தான் எனத் தவறாக எழுதியிருந்தீர்கள் என நினைத்தேன் (அல்லது ஆக்பானிஸ்தான் சரி தானா?, தாரி மொழியில் அவ்வாறு தான் எழுதுகிறார்களா?)/// இது எனது எழுத்துப் பிழைதான்.--ஆர்.பாலா (பேச்சு) 07:02, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
//சூரா, ஸூரா இரண்டும் ஒரே மாதிரியான ஒலிப்புத் தான் என்பதை நீங்கள் உணரவில்லையா?// இரண்டும் ஒரே ஒலியைத் தரவில்லை. சுப்ரமண்யம் மற்றும் ஸுப்ரமண்யம் அல்லது சூட்டல் மற்றும் ஸூட்டல் இரண்டையும் ஒலித்துப் பாருங்கள்.--ஆர்.பாலா (பேச்சு) 07:05, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இரண்டுக்கும் வேறுபாட்டை அறிய ஒலிப்பதிவுகள் ஏதாவது இணையத்தில் இருந்தால் காட்டுங்கள். தமிழ் விக்கியைக் கிரந்த விக்கியாக மாற்றி விடுவோம். அது என்ன ஸூட்டல். அப்படி ஒரு சொல் உள்ளதா? எந்தத் தமிழ் இலக்கியதில் பயன்படுத்தப்பட்டுள்ளது?--Kanags \உரையாடுக 07:30, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
எப்போதும் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள். சூரா, ஸூரா இரண்டும் ஒரே மாதிரியான ஒலிப்புத் தான் என்பதை நீங்கள் உணரவில்லையா? எனக் கேட்டதற்காக சூட்டல் மற்றும் ஸூட்டல் இரண்டையும் ஒலித்துப் பாருங்கள் எனச் சொன்னேன். --ஆர்.பாலா (பேச்சு) 07:56, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
அதற்காக இப்படித் தவறாக சொற்களை உருவாக்கி இணையத்தில் உலவ விடக்கூடாது. கூகுளாண்டவர் இதனையும் தனது தேடு பொறியில் சேர்த்து விடுவார். பின்னர் அதுவும் ஒரு தமிழ்ச் சொல்லாகி விடும்.--Kanags \உரையாடுக 08:11, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இப்படி எழுதிக் கொண்டிருக்க ஏவோசேபியோ ட சில்வா ஃபெஹேரா எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டிருக்கிறது. கவனித்தீர்களா? தலைப்பில் பிழையுள்ளது எல்லோருக்கும் விளங்குகிறதோ தெரியவில்லை. அதையும் வேலை மெனக்கெட்டு உரையாடித்தானே மாற்ற வேண்டும்? இல்லையா?--Kanags \உரையாடுக 08:16, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
எப்பவும் ரெம்பவும் விலகிப் போய்க் கொண்டிருப்பத்இல் உங்களுக்கு விருப்பம் அதிகம் எனத் தெரிகிறது. நேரடியாகவே கேட்கிறேன், "புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட்" ஒத்துக் கொள்ளப்படும் போது சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் ஏன் மாற்றப்பட்டது.--ஆர்.பாலா (பேச்சு) 08:53, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் அக்குறிப்பிட்ட கட்டுரைத் தலைப்புக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவை அனைத்துக் கட்டுரைகளுக்கும் புகுத்தப் பார்க்கிறீர்கள். இவ்வாறு போனால் தமிழ் விக்கியில் உள்ள முக்கால் வாசிக் கட்டுரைகளுக்கும் வேற்று மொழிப் பெயர்ப்புத் தலைப்பிட வேண்டியுள்ளதாக தெரிகிறது. பாலத்தீன விடுதலை இயக்கத்தின் பெயரும் உட்பட. எல்லோரும் தங்கள் விரும்பியவாறு எழுத அனுமதிக்கலாமா கூடாதா. முதலில் அதைக் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 09:26, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
தமிழில் அவ்வார்த்தை எவ்வாறு புழங்கியிருக்கிறதோ அவ்வாறே வைக்கலாம் என நான் எண்ணுகிறேன். ஏற்படும் குழப்பங்களை உரையாடல் பகுதியில் உரையாடி முடிவெடுக்கலாம். தமிழில் அறியப்படாத பெயரை வலிந்து திணிப்பது எத்தகைய பயனையும் தரப்போவதில்லை. தமிழில் புழங்காத பெயரை மூல மொழி ஓசையிலேயே ஒலிக்கும்படி கிரந்தம் சேர்த்து தமிழில் எழுதலாம்.--ஆர்.பாலா (பேச்சு) 09:59, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் இதனால் சொல்ல வருவது யாதெனில்', இதுவரையில் தமிழில் புழங்கியுள்ள உள்ள தமிழ்ச்சொற்கள் (பாலத்தீன விடுதலை இயக்கம் போன்றவை) தவிர்த்து இனிப் புதிதாகத் தமிழில் புகுத்தப்படும் பிறமொழிச் சொற்களை தமிழ்ப் படுத்தாமல் அநதந்த மொழி ஒலிப்பெயர்ப்பிலேயே உருவாக்குவோம். இதனால் தமிழ் வளரும். அப்படித்தானே. (பாலத்தீன விடுதலை இயக்கத்தை உருவாக்கியவன் பாவம்). --Kanags \உரையாடுக 09:31, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நாமாக வலிந்து உருவாக்க வேண்டாம் என்பதுதான். தவறாக உருவாக்கிவிட்டு பொது வெளியில் புழங்கும் சொற்களோடு ஒத்துப் போகாமல் இருந்துவிடக்கூடாது என்பதுதான். அதற்கான உதாரணம்தான் திரவ உந்துகை அமைப்பு மையம். அது திரவ இயக்கத் திட்ட மையம் என்ற சரியான பெயருடன்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்படியிருந்தும் தவறாக தலைப்பிற்கு மாற்றியுளோம். தற்போது நாம் பயன்படுத்தும் இணையம் என்ற சொல் 1990களின் மத்தியில் உலகளாவிய வலைப் பின்னல் மற்றும் இணையம் என தத்தளித்து கடைசியில் இணையம் என்பதில் நிலை பெற்றது. இது போலவே, இன்றைய சொற்பிரயோகமான கணினி முதலில் கணிணி என்றும் சில இடங்களில் அழைக்கப்பட்டது. பொது வெளியில் சகஜமான புழக்கத்திற்கு வந்த பின்பு அதை நாம் பயன்படுத்துவதில் தவறில்லை. நாமாக உருவாக்கி தனியான பாதையில் போக வேண்டாம். ஊரோடு ஒத்துப் போவோம் என்பதுதான். நாம் இங்கே தமிழை வளர்க்கிறோம் என நீங்கள் நம்புவது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 10:59, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நாம் வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்த்து தலைப்பிடுவதா அல்லது ஒலிப்பெயர்ப்பதா என்பதைப் பற்றி உரையாடுகிறோம். தமிழ்க் கலைச்சொல் உருவாக்கம் பற்றியதல்ல. இதனால் உங்கள் கணினி, திரவ உந்துகை அமைப்பு மையம் போன்றவை பற்றி உரையாட வேண்டியது இங்கு அல்ல. இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகள். நீங்கள் அக்கட்டுரைக்கு லிக்குவிட் புரொப்பல்சன் சிஸ்டம்ஸ் சென்டர் எனத் தலைப்பிட்டு எழுதியதை வேறு ஒருவர் திரவ உந்துகை அமைப்பு மையம் என மாற்றியிருந்தார் என்றால் அதைப் பற்றி இங்கு உரையாடுவோம். ஆனால் நீங்கள் ஒரு தமிழ்ப் பெயரில் தானே தொடங்கியிருந்தீரகள்? அது தமிழ்க் கலைச்சொல் பிரச்சினை. அதையும் இதையும் போட்டுக் குழப்ப வேண்டாம். //நாம் இங்கே தமிழை வளர்க்கிறோம் என நீங்கள் நம்புவது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது// பாலத்தீன விடுதலை இயக்கத்தை முனஸ்ஸமாத் அத்-தாஹீர் அல்-ஃபிலஸ்தீனிய்யா என எழுத விரும்பும் உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தான் இருக்கும்:)--Kanags \உரையாடுக 11:23, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]
உங்களால் உதாரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றைய காலத்தில் நீங்கள் மொழிபெயர்ப்பது வேறு எங்கும் இதுவரை பயன்படுத்தப்படாத ஒன்று. பாலத்தீன விடுதலை அமைப்பை மொழிபெயர்க்க வேண்டாம் முனஸ்ஸமாத் அத்-தாஹீர் அல்-ஃபிலஸ்தீனிய்யா என எழுத வேண்டும் என்று நான் சொன்னதைக் காட்டுங்கள்? உங்களின் வசதிக்காக தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஏற்கனவே பரவலாகப் பயன்பாட்டில் இருந்தால் அதைத் தாராளமாய்ப் பயன்படுத்தலாம். நாமாக வலிந்து எதையும் திணிக்க வேண்டாம். பதட்டப்படாமல் நிதானமாகப் படியுங்கள் ஒருவேளை நான் எழுதியது புரியலாம்.--ஆர்.பாலா (பேச்சு) 12:04, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]