பேச்சு:ஆந்த்தரனிலிக் அமிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y


தலைப்பு[தொகு]

அந்திறனிலிக்கு அமிலம் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:34, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பாஹிம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவியல் களஞ்சியத்தில் தலைப்பு ஆந்த்தரனிலிக் அமிலம் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதி II , பக்கம் 912. --கி.மூர்த்தி 11:46, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆந்த்தரனிலிக் என்பது சற்றேனும் தமிழிலக்கணத்துக்கு ஒத்து வராதே.--பாஹிம் (பேச்சு) 12:44, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தமிழகப் பலுக்கல் வர வேண்டுமாயின், ஆந்தரனிலிக்கு (குறைந்த பட்சம் ஆந்தரனிலிக்) என்றாவது எழுதலாம். ர், ழ் போன்ற மெய்களைத் தவிர வேறு எம்மெய்யெழுத்துகளும் மூன்று மெய்யெழுத்துகள் சேர்ந்து வரா. இலங்கை வழக்கின்படி, அந்திரனிலிக்கு அமிலம் என வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 15:00, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன் கருத்தை ஏற்கிறேன். ஆந்தரனிலிக் அமிலம் சரியாக இருக்கிறது. தலைப்பை நகர்த்தலாம். --கி.மூர்த்தி 17:54, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]