பேச்சு:ஆட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆட்டம் என்றால் நடனம் தானே? விளையாட்டு என்பது தான் சரி அல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:35, 12 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஆடுவது ஆட்டம். இது நடனம் (குத்தாட்டம்,சதிராட்டம்), விளையாட்டு (ஆடுபுலி ஆட்டம், சிலம்பாட்டம், சீட்டாட்டம்) இரண்டுக்கும் வரும். மேலும் கட்டிடம் ஆடுவதைக் கூட ஆட்டம் கண்டது எனலாம். :பிற பயன்பாடுகளாக:
  • match: 23வது தேசியக் கபடிப் போட்டியில் இன்றைய ஆட்டம்: தமிழ்நாடு எதிர் பஞ்சாப்
  • show : பையன் மூணாவது ஆட்டத்திற்கப்புறம் நேரங்கழிச்சு வந்ததாலே அசந்து தூங்கறான். இந்த வழக்கொழிந்து இப்போது காட்சி என்ற சொல் பரவலாகி வருகிறது.
ஆடி அடங்கும் வாழ்க்கையே ஆட்டம்தான்! ஆடிய ஆட்டம் என்ன ? - வீடு வரை உறவு கண்ணதாசன் பாடலில் தொகையறா
இங்கு game என்பதற்கு இணையாக ஆட்டமும் sport என்பதற்கு இணையாக விளையாட்டும் கலைச்சொற்களாக்கப்பட்டிருக்கின்றன. தெளிவு வேண்டின் ஆட்டம் (விளையாட்டு) எனத் தலைப்பிடலாமா ? --மணியன் (பேச்சு) 00:43, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]
விளையாட்டு என்ற கட்டுரை sports betting (??) என்ற ஆங்கிலப் பக்கத்துக்கும், உடல் திறன் விளையாட்டு என்ற கட்டுரை sport பக்கத்துக்கும் இணைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு கட்டுரையும் ஆட்டம் கட்டுரையும் ஒன்று போன்றே தோன்றுகின்றன.--Kanags \உரையாடுக 01:26, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]
கலைச்சொல்லாக்கம் இறுதியாக்கப்பட்டால் தற்போதைய விளையாட்டு கட்டுரையையும் ஆட்டம் கட்டுரையையும் ஒருங்கிணைத்து ஆ.வி game கட்டுரையுடன் இணைக்கலாம். உடல் திறன் விளையாட்டு கட்டுரை sport உடன் இணைக்கப்பட்டிருப்பது சரியே. மற்றது ஆட்டம் என்றால் அதனை விளையாட்டு என்ற தலைப்பிற்கு நகர்த்தலாம். sports bettingக்கு தனியான கட்டுரையாக விளையாட்டுச் சூது என்ற கட்டுரை எழுதலாம். முதலில் game என்பதற்கு பொருத்தமான கலைச்சொல் தேவை. என்னைப் பொறுத்தவரை ஆட்டம் பொருத்தமானது.--மணியன் (பேச்சு) 02:44, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆட்டம்&oldid=1678058" இலிருந்து மீள்விக்கப்பட்டது