பேச்சு:ஆடையற்ற ஒளிப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது போன்ற கட்டுரை தலைப்புகளும், செய்திகளும் தவறான நோக்கத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வர வைப்பதாக் இருக்கிறது. இக்கட்டுரை மூலம் தமிழுக்கு அல்லது தமிழருக்கு என்ன பயன்? நீக்கம் செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 10:30, 26 சனவரி 2011 (UTC)

நிச்சயமாக, நீக்குவது மட்டுமல்ல. இவ்வாறான தனிப்பட்ட ஒருசிலரின் மனநோய் தீர்க்கும் தளமாக விக்கிப்பிடியா ஆகிவிடக்கூடாது. நாளைய தமிழ் சமுதாயம் நலன் பெறவேண்டும் எனும் நோக்கிலேயே பலரின் கூட்டு முயற்சியில் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்கின்றனர். பாடசாலை, பல்கலைக்கழகம் மட்டங்களிலும் பயிற்சி பட்டரைகள் நாடத்தப்படுகின்றன. இவ்வாறான ஆக்கங்கள் காணும் போது பெற்றோர் தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தையே அனுக விடமாட்டார்கள்.

இவ்வாறான ஆக்கங்களை எழுதுவோர் எவ்வாறான மனநிலையில் எதனை நோக்கமாக கொண்டு எழுதுகின்றனர் என்பதை கருத்தில் கொள்ளல் நலம். --மொகமட் அனிப் 10:38, 26 சனவரி 2011 (UTC)

நண்பர்கள் புரிந்து கொண்டு செயல்படுகின்றார்களா இல்லை, புரியாமல் செயல்படுகின்றார்களா என தெரியவில்லை. பாலியல், நிர்வாணம் பற்றிய கட்டுரைகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்பதாலே அக்கட்டுரைகளை எழுத முனைந்தேன். ஆனால் கிடைத்த பலன் வேறொன்றாக இருக்கிறது. இப்படிபட்ட கட்டுரைகள் வேண்டாம் என கூறினாலே, நிறுத்தப்படும்,. ஆனால் ஒரு பொது தளத்தில் என்ன நோக்கத்திற்காக எழுதப்படுகின்றது என்பதை அறியாமல், மனநோய் என்று சாடுவது ஏற்புடையதா. தமிழ் விக்கி பயனர்களின் மனநிலை இத்தனை தரம்தாழ்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை.

இன்னும் எத்தனைகாலம் பாலியல் என்றாலே அஞ்சி ஓடப்போகிறோம் என தெரியவில்லை. இருந்தும் பெரும்பாலான மக்களின் மனநிலை மாறும் வரை இப்படியே இருக்கட்டும். நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இந்தக் கட்டுரையில் எந்த வித தகவலும் இல்லை. ஆரம்பத்தில் தனது [1] என்ற வலைப்பதிவில் இருந்ததை அப்படியே வெட்டி ஒட்டி கட்டுரைகளை ஆரம்பித்தீர்கள். இப்போது அவற்றை நீக்கி ஓரிரு வரிகளை எழுதியிருக்கிறீர்கள். இப்படியான கட்டுரைகள் ஆங்கில விக்கியிலும் மேலும் ஓரிரண்டு ஐரோப்பிய மொழி விக்கிகளிலும் தான் கட்டுரைகள் உள்ளன என்பதைக் கவனியுங்கள். தமிழ்விக்கியில் பதிவு செய்ய நிறையக் கட்டுரைகள் உள்ளன. உங்கள் கட்டுரைகளைத் திருத்துவதற்கு அனைவருக்கும் நேரம் கிடைக்காது. வேறு யாருக்கும் ஆட்சேபம் இல்லாவிட்டால் இந்தக் கட்டுரைகளை நீக்குகிறேன்.--Kanags \உரையாடுக 11:52, 26 சனவரி 2011 (UTC)
ஒரு கலைக்களஞ்சியத்தில் இத்தலைப்பு உகந்தது/உகந்ததல்ல என்று பிரித்துப்பார்த்தல் கூடாது. அதுவும் “மனநோய்” என்று சொல்வதெல்லாம். மிகவும் கண்டிக்கத்தக்கது. பெற்றோர் அணுக விடமாட்டார்கள் போன்ற கலாச்சார காவல் மனப்பான்மையோடு நாம் இங்கு செயல் பட்டால் கலைக்களஞ்சியத்தை உருவாக்க முடியாது. அப்படியென்றால் பாலியல் தலைப்புகளில் எதுவும் எழுதவே இயலாது. சில பெற்றோர்களுக்கு அரசியல், பிற மதங்கள் கூடத்தான் பிடிக்காது, அதற்காக அத்தலைப்பு கட்டுரைகளையெல்லாம் நீக்கிவிடலாமா? விக்கிப்பீடியாவுக்கு அதிகப் பயனர்கள் வரும் கட்டுரைகளின் முதல் 100 இடங்களுள் “ஆண்குறி” "பாலுறவு”, “காம சூத்திரம்”, “சுய இன்பம்” “வாய்வழிப் பாலுறவு” கட்டுரைகள் ஆகியவை உள்ளன. அதற்காக அவற்றையும் நீக்கிவிடுவதா?. பெற்றோருக்கு உயிரியல் பாடப்புத்தகங்களில் இனப்பெருக்கு உடல் உறுப்புகளின் படங்கள் நீக்கப்பட்டுவிட்டனவா? “தமிழுக்கும் அல்லது தமிழருக்கு என்ன பயன்” என்று ஒவ்வொரு துறைக்கும் கேட்கலாமா? ஒரு கலைக்களஞ்சியம் என்பது - அனைத்து துறைகளையும் சேர்ந்த கட்டுரைகளை உள்ளடக்கியதே. கலாச்சாரச் சூழலை உணர்ந்து அதற்கேற்றார்போல தமிழ் விக்கியினைச் செலுத்துகிறேன் என்று சென்சார் போர்டு போல நாம் செயல்படக்கூடாது. கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் தகவல்களுடன் அமைந்திருந்தால் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கனவே. இதன் உள்ளடக்கம் சரியில்லையென்றல் குறுங்கட்டுரையாக மாற்றிவிட்டு போய்விடலாம். இதனை இன்று நீக்கினோம் என்றால், இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். நாளை ஒவ்வொரு பயனரும் இது பெற்றோருக்குப் பிடிக்காது, இதனால் தமிழருக்குப் பயனில்லை என்று பல கட்டுரைகளை நீக்கக் கேட்பர். தமிழினால் பல துறைகளை அணுகவே முடியாது என்று தமிழை இகழ்வோர் கேலி செய்து கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற நிலைப்பாடு அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே அமையும்--சோடாபாட்டில்உரையாடுக 14:07, 26 சனவரி 2011 (UTC)
சோடாபாட்டிலின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். இது போன்ற கட்டுரைகள் மிகப்பெரிய நிகழ்நிலைக் கலைக் களஞ்சியமான ஆங்கில விக்கியில் உள்ளதென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜெகதீஸ்வரனின் பின்னூட்டத்தைப் பாருங்கள், அவர் மிகவும் வருத்தப்படுகிறார். இதுபோல ஒரு துறை சார் கட்டுரை எழுதும் வல்லுனப் பயனர்களை பங்களிக்க ஊக்குவிக்க வேண்டும். 'கெட்டது' என்று யாருமே எழுதவில்லையெனில் யார்தான் எழுதுவாரோ?--சூர்ய பிரகாசு.ச.அ. 14:28, 26 சனவரி 2011 (UTC)
இது போலத் தான் சில நாட்களுக்கு முன்னால் விக்சனரியில் “குண்டி” “பிட்டம்” என்று எழுதத்தொடங்கிய ஒருவரைப் பார்த்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு மொழி அகராதியில் இவ்வார்த்தைகள் இருக்கலாமா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அதே போலத்தான் தகவல் களஞ்சியத்துக்கு பாலியல் தலைப்புகள் வேண்டாம் என்று சொல்வதும். --சோடாபாட்டில்உரையாடுக 14:38, 26 சனவரி 2011 (UTC)