பேச்சு:ஆடி (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆடி என்பது ஆடி மாதத்தை குறிப்பது போல உள்ளது . ஆடி ( நிறுவனம் ) என்று மற்ற பரிந்துரைகிறேன் . - இராஜ்குமார் 12:53 சனவரி 04 , 2009

ஆடி[தொகு]

ஆடிகள்

இயற்பியலில் ஆடி என்பது mirror ஐக் குறிக்கும். plane mirror தளவாடி, convex mirror குவிவாடி, concave mirror குழிவாடி என்போம். ஈழத்தில் மட்டும் தான் இச்சொற்கள் உபயோகத்தில் உள்ளன போற் தெரிகிறது. தமிழ்நாட்டில் இவற்றை எப்படிச் சொல்கிறீர்கள்?--Kanags \பேச்சு 11:00, 4 ஜனவரி 2010 (UTC)

  • தமிழகத்தில் mirror என்பது கண்ணாடியையும், lens என்ற சொல் ஆடியையும் குறிக்கின்றனர். வில்லை என்று சொல், பொதுவான ஒரு துண்டு(சிறுபகுதி) என்ற பொருளில் பயனாகிறது. குவியாடி, குழியாடி(concave lens) த* உழவன் 05:14, 9 ஜனவரி 2010 (UTC)
தமிழ்நாட்டு அரசு பாடப் புத்தகங்களில்
  • mirror = ஆடி
  • lens = லென்சு (அ) வில்லை
  • plane mirror = சமதள ஆடி (அ) தள ஆடி
  • concave mirror = குழியாடி; convex mirror = குவியாடி
  • concave lens = குழி லென்சு (அ) குழி வில்லை; convex lens = குவி லென்சு (அ) குவி வில்லை. -- பரிதிமதி 11:31, 9 சனவரி 2010 (இந்திய நேரம்)
பரிதிமதியின் தகவலுக்கு நன்றி. இந்த விதயத்தில் தமிழ்நாடும் ஈழமும் ஒத்துப் போகிறது.--Kanags \பேச்சு 06:27, 9 ஜனவரி 2010 (UTC)
நானும் பாடப் புத்தகங்களில் தேடினேன் . அதிக நேரங்கள் செலவிடாத காரணங்களால் என்னால் கண்டறிய முடியவில்லை . இந்த தலைப்பில் கட்டுரை தொகுக்கலாம் என்று தான் இந்த பேச்சை தொடங்கினேன் . பரிதிமதி அவர்கள் எந்த வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்தார்கள் என்று சொன்னால் உதவியாக இருக்கும் . யாரேனும் ஆடி என்ற தலைப்பில் கட்டுரை தொடங்கினால் நானும் சேர்ந்து பங்களிக்க விருப்பம் . - இராஜ்குமார் 13:16 , ஜனவரி 2010 ரியாத்
பதினொன்றாம் வகுப்பு - இயற்பியல் பாடநூலில் ஒன்பதாவது அலகு கதிர்ஒளியியலில் கொடுக்கப்பட்டுள்ளது. [1] -- பரிதிமதி 21:46, 9 சனவரி 2010 (இந்திய நேரம்)
நன்றி . - இராஜ்குமார் 6:22 , 9 சனவரி 2010 (ரியாத் நேரம்)