பேச்சு:ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை தமிழ் மூலம் உடைய ஆங்கில சொற்கள் பட்டியல் எனலாம். --Natkeeran 21:06, 19 டிசம்பர் 2008 (UTC)

ஆங்கிலம் பெற்றுக்கொண்ட தமிழ்ச்சொற்கள் எனலாம் அல்லது ஆங்கிலத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள் எனலாம்?--செல்வா 21:10, 19 டிசம்பர் 2008 (UTC)

ஆம் அப்படியே மாற்றிவிடுங்கள். நன்றி HK Arun

ஆங்கிலம் உள்வாங்கிய தமிழ்ச் சொற்கள் என்ற தலைப்பே நன்றாக இருக்கிறது. மாற்ற வேண்டிய தேவை என்ன?--Kanags \பேச்சு 10:38, 21 டிசம்பர் 2008 (UTC)

பப்படம் என்ற சொல்லானது மலையாளத்தில் உள்ளது. தமிழில் அப்பளம் என்றே சொல்கிறோம். எனவே அதனை நீக்கிவிடலாமே.?

- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:46, 18 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

இலங்கையில் தமிழர்கள் பப்படம் என்றும் அப்பளத்தை அழைப்பர், நான் பப்படம் என்றுதான் கூறுவேன்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:40, 18 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

பிழையான தகவல்[தொகு]

தமிழிலிருந்து நேரடியாக ஆங்கிலத்துக்குச் சென்ற சொற்களின் பட்டியலில் crack என்ற சொல்லைக் குறித்திருப்பது தவறு. அச்சொல்லின் மூலத்தைப் பற்றி Merrian-Webster Dictionary இல் Origin: Middle English crakken, from Old English cracian; akin to Old High German chrahhon to resound. First use: before 12th century எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது எப்படி நேரடியாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற சொல்லாகும்?--பாஹிம் (பேச்சு) 15:17, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

மேற்படி crack என்ற சொல்லின் மூலத்தைப் பற்றி ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ள Oxford English Dictionary இல் Origin: Old English cracian 'make an explosive noise'; of Germanic origin; related to Dutch kraken and German krachen. sense 4 of the noun is from Irish craic 'entertaining conversation' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சொல்லைப் பற்றி கட்டுரையில் புனைந்துரைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.--பாஹிம் (பேச்சு) 16:11, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள cut என்ற சொல்லின் மூலத்தைப் பற்றி Origin: Middle English cutten. First use: 13th century என்கிறது Merriam-Webster Dictionary.--பாஹிம் (பேச்சு) 15:24, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

Cut என்ற சொல்லின் மூலத்துக்கு கட்டுரையில் ஆதாரமாகத் தரப்பட்டுள்ள Oxford English Dictionary கூறுவதாவது: Origin: Middle English (probably existing, although not recorded, in Old English); probably of Germanic origin and related to Norwegian kutte and Icelandic kuta 'cut with a small knife', kuti 'small blunt knife'. அது தமிழைப் பற்றி எதுவுமே கூறவில்லையே? எனவே, இதுவும் ஒரு பொய்த் தகவல்.--பாஹிம் (பேச்சு) 16:24, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

Way என்ற சொல்லின் மூலம் Origin: Middle English, from Old English weg; akin to Old High German weg way, Old English wegan to move, Latin vehere to carry, via way. First use: before 12th century என்று Merriam-Webster Dictionary குறிப்பிடுகிறது.--பாஹிம் (பேச்சு) 15:28, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

Way என்ற சொல்லும் தமிழிலிருந்து சென்றதாமா? Oxford English Dictionary, அஃதாவது கட்டுரையில் ஆதாரமாகச் சுட்டப்பட்டிருப்பது அவ்வாறு கூறவில்லை. மாறாக அது Origin: Old English weg, of Germanic origin; related to Dutch weg and German Weg, from a base meaning 'move, carry' என்கிறது.--பாஹிம் (பேச்சு) 16:29, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

Will என்ற சொல்லின் மூலம் Origin: Middle English, from Old English willa will, desire; akin to Old English wille. First use: before 12th century என்றே Merriam-Webster Dictionary குறிப்பிடுகிறது.--பாஹிம் (பேச்சு) 15:32, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

Prawn என்ற சொல்லின் மூலம் Origin: Middle English prane will. First use: 15th century என்றே Merriam-Webster Dictionary குறிப்பிடுகிறது--பாஹிம் (பேச்சு) 15:36, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

அவ்வாறே prey என்ற சொல்லின் மூலத்தைப் பற்றி Origin: Middle English preie, from Anglo-French, from Latin praeda; akin to Latin prehendere to grasp, seize - more at get. First use: 13th century என்றே Merriam-Webster Dictionary குறிப்பிடுகிறது. இந்நிலையில் வெறுமனே OED என்று மேற்படி சொற்கள் பெறப்பட்ட மூலம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பிழையானதாகும். இச்சொற்களின் மூலங்களைப் பற்றி Oxford English Dictionary எப்படிக் குறிப்பிடுகிறது என்ற தகவல் இங்கே கட்டாயம் தேவைப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 15:42, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]

வேற்றுமொழியிலுள்ள ஒரு சொல் தமிழைப் போன்று ஒத்து ஒலிக்கிறது என்பதற்காக அதன் மூலம் தமிழே என்று கருதிக் கொள்வது தவறு. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள prey என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலத்தைப் பற்றி கட்டுரையில் ஆதாரமாகச் சுட்டியுள்ள Oxford English Dictionary தமிழைப் பற்றி மூச்சு விடவுமில்லை. மாறாக அது இச்சொல்லின் மூலத்தைப் பற்றி Origin: Middle English (also denoting plunder taken in war): the noun from Old French preie, from Latin praeda 'booty', the verb from Old French preier, based on Latin praedari 'seize as plunder', from praeda என்றே குறிப்பிடுகிறது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் போன்று பொய்யான தகவல்களைக் குறிப்பிடுவது அல்லது வைத்திருப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தையும் நம்பகத் தன்மையையும் அடியோடு குறைத்து விடும் என்பது திண்ணம்.--பாஹிம் (பேச்சு) 16:43, 28 அக்டோபர் 2014 (UTC)Reply[பதில் அளி]