உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அ. தாமோதரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. தாமோதரன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நன்றியுரை குறிப்பு

[தொகு]

பேராசிரியர்கள் தாமசு இலேமன் (Thomas Lehmann) அவர்களும் பா. ரா. சுப்பிரமணியன் அவர்களும் முனைவர் தாமோதரன் அவர்கள் இறந்த இறப்புச்செய்தி வரைவை பாரிசில் இருக்கும் முனைவர் இழான்-லுக்கு செவியர் (Jean-Luc Chevillard) அவர்களுக்கு எழுதிய மடலை, முனைவர் இழாலன்-லுக்கு செவியர், வல்லமை மடலாடற்குழுவிலும் தமிழ் மன்றக் குழுவிலும் இட்டப் பதிவின் அடிப்படியில் இக்கட்டுரையை எழுதினேன். இவர்கள் அனைவருக்கும், யான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.--செல்வா (பேச்சு) 22:54, 30 சூன் 2019 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்

[தொகு]

இக்கட்டுரை வளர்ந்து இருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன். செல்வாவின் பதிவுகளைக் காணும் போது, அம்மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. அறிஞர் நா. கணேசன் அவர்களிடம் மின்னஞ்சல் வழியே சில தகவல்களைக் கேட்டிருந்தேன். அவர் அனுப்பிய செய்திகளை இங்கு தருகிறேன். மேலும், அவர் பிரான்சில் இருந்து, தாமோதரன் குறித்து, அவர்களிடையே இருந்த நட்பு குறித்து, எனது அலைப்பேசிக்கு பேசினார். நெகிழ்வான உரையாடல் அது. அவர் அளித்த இச்செய்திகளின் நோக்கம், கட்டுரையின் தலைப்பு மாற்றப்படுவது குறித்தே ஆகும்.

எனவே, தலைப்பை அ. தாமோதரன் என அமைக்கக் கோருகிறேன். @Kanags and செல்வா:--உழவன் (உரை) 03:10, 4 சூலை 2019 (UTC)[பதிலளி]

"அ. தாமோதரன்" என்றே தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 08:26, 4 சூலை 2019 (UTC)[பதிலளி]
ஆம் அ. தாமோதரன் என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். திருத்ததிற்கு நன்றி. --செல்வா (பேச்சு) 13:43, 7 சூலை 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அ._தாமோதரன்&oldid=4074833" இலிருந்து மீள்விக்கப்பட்டது