பேச்சு:அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழற்சிக்கு எதிரான இசுடீரோய்டு அல்லாத மருந்துகள் என்று இருக்க வேண்டுமல்லவா? இல்லையெனில் மயக்கு இடைவெளி வருவது போலத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 13:39, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

anti-inflammatory drugs (அழற்சிக்கு எதிரான மருந்து) எனும் பொதுக்குழுமத்தில் இசுடீரோய்டு கொண்டுள்ள அழற்சிக்கு எதிரான மருந்துகளும் உண்டு, இசுடீரோய்டு கொண்டிராத அழற்சிக்கு எதிரான மருந்துகளும் உண்டு, எனவேதான் Nonsteroidal anti-inflammatory drugs – NSAID என்பதையே இவ்வாறு குறிப்பிட்டேன், நீங்கள் கூறியது மிகவும் பொருத்தமானதாக இருப்பின் மாற்றி விடலாம். --சி. செந்தி 14:38, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
இசுடீராய்டு கொண்டிருப்பது மருந்தின் பண்பா அல்லது அழற்சியின் பண்பா என்ற குழப்பத்தைத் தவிர்க்கவே அவ்வாறு பரிந்துரைத்தேன். -- சுந்தர் \பேச்சு 16:09, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
இப்போது புரிகிறது சுந்தர், இவ்வகையில் பார்க்கும்போது நீங்கள் கூறியதுதான் மிகச் சரி, எனவே தலைப்பை மாற்றுவது ('அழற்சிக்கு எதிரான இசுடீரோய்டு அல்லாத மருந்துகள் அல்லது அழற்சிக்கு எதிரான இசுடீரோய்டு கொண்டிராத மருந்துகள்) நன்று எனக் கருதுகின்றேன். உங்களுக்கு நன்றி. --சி. செந்தி 16:47, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் என்னும் தலைப்பு சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இசுட்டீராய்டு என்றும் சொல்வது பொருத்தமாக இருக்கும். எப்படியாயினும் டகர ஒற்று (ட்) இருப்பது நல்லது என்று நினைக்கிறேன் --செல்வா 17:05, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா, அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் என்று தலைப்பை மாற்றி அமைக்க பரிந்துரைக்கிறேன். --சி. செந்தி 18:31, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
செந்தி, இதனை வெறுமனே அழற்சிக்கான இசுட்டீரோய்டு இல்லா மருந்துகள் என எழுதினாலே போதுமானதாக இருக்காதா? ஆங்கிலத்தில் anti-inflamatory என்றாலும் நாம் அப்படிச் சொல்ல வேண்டியதில்லையே. குடற்புண்ணுக்கான மருந்து, தலைவலிக்கான மருந்து என்று கூறுமிடங்களில் நோய்/குறைபாடு -ஐச் சொல்லி மருந்து என்கிறோமே, அதே போலச் சொன்னால் சற்று சுருக்கமாகவும் இருக்கும். அழற்சிக்கான இசுட்டீரோய்டிலா மருந்துகள் என்றுகூடச் சொல்லலாம். --செல்வா 21:37, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • முதற்கண் கட்டுரையைத் திருத்தி அமைத்தமைக்கு நன்றி செல்வா. கட்டுரை எழுதுவதில் நான் விடும் பிழைகளையும் சுட்டிக்காட்டினால் மேற்கொண்டு தவறுகள் குறைந்த கட்டுரையை நான் எழுத உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு அமிலம் என்று நான் உபயோகித்தது, ஈழத்தில் பாடசாலையில் அமிலம் என்றே பயன்படுத்துவோம் என்பதனால், காடி என்பது நான் புதிதாக அறிந்த சொல். http://ta.wiktionary.org/wiki/acid - அமிலம் என்று அழைப்பதா காடி என்று அழைப்பதா சிறந்தது?
(அழற்சிக்கான இசுட்டீரோய்டு இல்லா மருந்துகள்): தமிழில் அவ்வாறு பயன்பாடு இருக்கையில் உங்கள் கூற்று சரியெனப்படுகிறது, ஆனால் சில சந்தர்ப்பங்களில் குழப்பத்தை உண்டாக்கக்கூடும். வயிற்றுப்போக்கு அல்லது பேதி (diarrhoea) எனும் சந்தர்ப்பத்தைக் கருதுகையில் பேதியை உண்டாக்கும், கட்டுப்படுத்தும் என இரு வெவ்வேறு எதிரான தொழிற்பாட்டை உண்டாக்கக்கூடிய மருந்துகள் காணப்படுகின்றன. பேதியை உண்டாக்கும் laxative என்பதைப் பேதி மருந்து (மலமிளக்கி) என்கின்றோம்; பேதியைக் கட்டுப்படுத்தும் anti-diarrhoeal என்பதை கழிச்சல் அடக்கி;பேதி அடக்கி எனலாம், நீங்கள் கூறிய முறையில் anti-diarrhoeal என்பதைப் பார்த்தால், அதுவே பேதிக்கான மருந்து (பேதி மருந்து) என்று வருகிறது. (இது ஒரு எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன்). எனவே சந்தர்ப்பத்தைப் பொறுத்துத் தலைப்பிடுவோம், இங்கு நீங்கள் கூறியது பொருந்துவதால் மாற்றலாம் (அழற்சிக்கான இசுட்டீரோய்டு இல்லா மருந்துகள்) எனக் கருதுகிறேன்.

அழற்சிக்கு எதிரான மருந்துகள் (அல்லது அழற்சிக்கான மருந்துகள்?) எனும் பிரிவில் இக்கட்டுரைக்குரிய மருந்து அடங்குகிறது, இப்பிரிவில் மேலும் இசுட்டீரோய்டு மருந்துகள், Immune Selective Anti-Inflammatory Derivatives என்பன அடங்குகின்றன. --சி. செந்தி 06:09, 19 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

  • steroid-பருவகம்;
    anti inflammatory-அழற்சித் தணிப்பு

எனவே, பருவகமற்ற அழற்சித் தணிப்பு மருந்துகள் எனலாமே.எண்ணிப் பார்க்கவும்.