பேச்சு:அளிப்புரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிரலாக்கம் உள்ளிட்ட பிற பணிகளை கட்டற்று இருக்கும் படிச் செய்தற்கான பொதுவான முறை காபிலெப்ட் ஆகும். இங்ஙனம் படைக்கப்பட்டவற்றிலிருந்து மாற்றம்பெற்ற விரிவாக்கம் பெற்ற அனைத்தும் கட்டற்று இருத்தல் அவசியம்.

நிரலொன்றை காபிலெப்ட் செய்ய முதற்கண் அதனைப் பதிப்புரிமம் பெற்றதாக அறிவித்து அதனை வழங்குதற்கான விதிகளில், வழங்குதற்கான விதிகள் மாற்றப்படாத பட்சத்தில், நிரற் மூலத்தையோ அல்லது அதிலிருந்து தருவிக்கப்பட்ட எந்தவொரு நிரலையோ அனைவரும் பயன்படுத்த, மாற்ற மற்றும் மறுவிநியோகம் செய்ய அனைவருக்கும் உரிமம் உண்டு எனத் தெரிவிப்பது வழக்கம். இது சட்டபூர்வமானக் கருவியுமாகிறது. இங்ஙனம் நிரலும் சுதந்தரங்களும் பிரிக்க முடியாதவையாகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அளிப்புரிமை&oldid=224972" இருந்து மீள்விக்கப்பட்டது