உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அலை–துகள் இருமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கோடு போட்டுப் புணர்த்துவது இலக்கணத்துக்குப் புறம்பானது.--பாஹிம் (பேச்சு) 05:22, 21 மே 2016 (UTC)[பதிலளி]

இங்கு புணர்ச்சி எதுவும் இல்லை. அறிவியலைப் பார்க்க வேண்டும்:)--Kanags \உரையாடுக 05:30, 21 மே 2016 (UTC)[பதிலளி]

அறிவியலுக்குத் தமிழ் தேவையற்றதா?--பாஹிம் (பேச்சு) 14:29, 21 மே 2016 (UTC)[பதிலளி]

என்ன நீங்கள்? அடிப்படை இல்லாமல் வாதிடுகிறீர்கள். Wave–particle duality என்பது தான் அறிவியல் தலைப்பு. புணர்ச்சி இங்கு தேவையில்லை. உங்கள் கருத்துப்படி புணர்ச்சி தேவை என்றால் அலைத்துகள் இருமை என்றல்லவா வரவேண்டும்? ஆனால் அதுவும் இங்கு பொருந்தாது. உரையாடல் இல்லாமல் இக்கட்டுரையின் தலைப்பை நகர்த்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 22:38, 21 மே 2016 (UTC)[பதிலளி]

அலைத்துகள் இருமை என்று வருவதற்கு அடிப்படையில்லை. காய் கனி, தாய் தந்தை என்று புணர்த்துவதற்கு இலக்கணத்தில் உம்மைத்தொகை என்று கூறப்படுகிறது. அலைத்துகள் என்றால் அலையின் துகள் என்று பொருளேற்படும். மாறாக உம்மைத்தொகையில் அலை துகள் என்றால் அலையும் துகளும் என்று பொருள். அடிப்படையில்லாமல் இலக்கணங் கூற முடியாது. எடுத்ததற்கெல்லாம் ஒற்று மிகுமென வாதிடலாகாது. இங்கே இலக்கண அடிப்படை தெரியாமல் வாதிடுவது நானா நீங்களா?--பாஹிம் (பேச்சு) 02:34, 22 மே 2016 (UTC)[பதிலளி]

ஏன் அலை-துகள் என இருக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 02:51, 22 மே 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவதற்கு தமிழில் இலக்கண அடிப்படையெதுவுங் கிடையாது. அவ்வாறு கோடு போட்டுப் புணர்த்துவதன் பொருள் யாதென்பது தெளிவற்றது.--பாஹிம் (பேச்சு) 03:11, 22 மே 2016 (UTC)[பதிலளி]

விளக்கம் உங்களுக்குத் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் விட்டு விடுங்கள். அதை விடுத்து அறிவியலைக் கேள்விக்குள்ளாக்காதீர்கள். இனிமேலும் உங்கள் விதண்டாவாதத்திற்குப் (மன்னிக்கவும், உங்கள் உரையாடலை வேறெவ்வாறு கூறுவது?) பதில் கூற என்னால் முடியாது. அலையும் துகளும் இருமை என்று பொருள் கூறுவது முழுக்க முழுக்கத் தவறானது. இயற்பியலில் அவ்வாறில்லை.--Kanags \உரையாடுக 04:06, 22 மே 2016 (UTC)[பதிலளி]

விதண்டாவாதம் செய்வது நானா நீங்களா? உங்களது முட்டாள் தனத்துக்கு (மன்னிக்கவும், உங்கள் உரையாடலை வேறெவ்வாறு கூறுவது?) பதில் கூற என்னால் முடியாது. உங்களுக்கு இலக்கணம் தெரியாவிட்டால் நானென்ன கூற முடியும்? அலையும் துகளும் என்று மட்டுமே பொருளென்று நான் கூறவில்லை. காய்கறி வாங்க வேண்டுமென்று கூறினால் காயும் வாங்க வேண்டும் கறியும் வாங்க வேண்டுமென்று பொருள் கிடையாது. கட்டுரையில் தரப்பட்ட பொருளுக்கு நிகராக அலை துகள் என்பது வருகிறது.--பாஹிம் (பேச்சு) 04:35, 22 மே 2016 (UTC)[பதிலளி]

இப்போது நீங்கள் மாறிக் கதைக்கிறீர்கள். உங்கள் இலக்கணத்திற்கு நீங்கள் முன்னர் தாய் தந்தை காய் கனி என உதாரணம் தந்தீர்கள். இப்போது அதுவல்ல காய்கறி என உதாரணம் தருகிறீர்கள். உங்களுக்கே விளப்பம் இல்லாத போது உங்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்கலாம். இக்கட்டுரை இயற்பியலில் மிகவும் பிரபலமான Wave–particle duality பற்றியதே. டெ புராலி 1924 ஆம் ஆண்டில் தனது கருதுகோளிற்கு இவ்வாறே பெயரிட்டார். waveparticle duality (காய்கறி) என்றோ wave particle (காய் கறி, காயும் கறியும், தாயும் தந்தையும்) என்றோ தலைப்பிடவில்லை., தமிழ் இலக்கணம் பற்றியதல்ல. அரைகுறை இலக்கணம் படித்தால் இவ்வாறுதான் வாதிட வேண்டி வரும். அது சரி, கபிலன் என்பதற்கு கஃபிலன் என்பது தான் சரி என முன்னர் நீண்ட நேரம் (நாட்கள்) பலரது நேரத்தை வீணாக்கி வாதிட்டீர்கள். அதற்கு நீங்கள் ஆதாரம் தருவதாகவும் கூறிச் சென்றீர்கள். இன்று வரை நீங்கள் ஆதாரம் தந்ததாக எனக்குத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 05:00, 22 மே 2016 (UTC)[பதிலளி]

அரைகுறை இலக்கணம் படித்தது நானல்ல. கபிலன் என்பதில் பி என்பது B உச்சரிப்பு வரவே வராது என்பதற்கு நான் முன்னரே ஆதாரம் தந்தாகி விட்டது. பேச்சு:ஜப்பான் பக்கத்தைப் பாருங்கள், விளங்கும். அலைதுகள் அல்லது அலை துகள் என்றே வர வேண்டும். தமிழில் அலை-துகள் என்று வருவது முற்றிலும் பிழை. அலை துகள் இருமை என்பது இங்கே கட்டுரையில் தந்துள்ளவாறு அலையின் தன்மையும் துகளின் தன்மையும் என்னும் விளக்கத்துக்கு நன்கு பொருந்துகிறது. இலக்கணம் விளங்காத உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் விளக்கம் கூற வேண்டியிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 05:09, 22 மே 2016 (UTC)[பதிலளி]

பேச்சு:ஆப்பிரிக்கா பாருங்கள். மாற்றிக் கதைப்பது நானா நீங்களா?--Kanags \உரையாடுக 05:17, 22 மே 2016 (UTC)[பதிலளி]

ஆம், அதில் செல்வாவும் நீங்களும் கூறிய ஆதாரமோ அடிப்படையோ இல்லாத கருத்துக்களுக்குத்தான் நான் ஆலமரத்தடியில் எல்லோரும் பார்க்கும் விதமாகப் பதிலளித்திருந்தேன். அப்பதிலையே பேச்சு:ஜப்பான் பக்கத்தில் படியெடுத்தேன். நீங்களும் அதைப் பார்த்திருக்கிறீர்கள். தமிழில் நடுவில் பகரம் வந்தால் B உச்சரிப்பு வருவது முற்றிலும் பிழை. அதற்கான ஆதாரத்தைத் தந்திருக்கும் போது வடமொழித் தாக்கத்துக்கு உட்பட்ட உங்களைப் போன்றவர்களால் இதனை ஏற்றுக் கொள்வது கடினமே. கபிலன் என்றெழுதிவிட்டு kabilan என்று வாசிப்பது பிழை. ஆதாரத்தைச் சிலப்பதிகாரத்திலிருந்து உதாரணமெடுத்துத் தந்திருக்கிறேன். இன்னும் விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா?--பாஹிம் (பேச்சு) 05:22, 22 மே 2016 (UTC)[பதிலளி]

பாகிம், மீண்டும் பேச்சு:ஆப்பிரிக்காவைப் படித்துப் பாருங்கள். //இலங்கையில் யாரும் கபிலர் என்பதை kabilar என்று கூறுவதில்லை. மாறாக kafilar என்றுதான் கூறுகிறார்கள். சிபி என்பதை sify என்றுதான் கூறுகிறார்கள்// என்று எழுதியது நீங்களில்லையா?--Kanags \உரையாடுக 21:03, 23 மே 2016 (UTC)[பதிலளி]

அதைத்தான் இப்போதும் கூறுகிறேன். நான் வடமொழித் தாக்கத்துக்கு உட்பட்டவர்களை இதில் உள்ளடக்கவில்லை. தமிழ் மொழியில் மகர மெய்யெழுத்தை அடுத்து வரும் பகரம் தவிரந்த எவ்விடத்திலும் B ஒலி வரவே வராது. அவ்வாறிருக்கையில், உங்களைப் போன்றவர்கள் B ஒலிப்பை வலிந்து புகுத்திப் பேசுவது வடமொழித் தாக்கத்தினாலேயே. அது எப்போதும் தவறு.--பாஹிம் (பேச்சு) 02:25, 24 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலை–துகள்_இருமை&oldid=2067011" இலிருந்து மீள்விக்கப்பட்டது