பேச்சு:அலைபாக்டீரியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலைபாக்டீரியா உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அலைபாக்டீரியா என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.

கலைச்சொற்கள்[தொகு]

கட்டுரையில் உப்பிறப்புவளி நிலைத்தல் (nitrogen fixation), காலகமாக்கல் (nitrification), காலகநீக்கம் (denitrification) என்று குறிப்பிடப்படுகின்றது. nitrification என்பதை நைதரசனாக்கம், என்றும், denitrification என்பதை நைதரசனீக்கம் என்றும், nitrogen fixation என்பதை நைதரசன் நிலைநிறுத்தம் என்றும் கூறுவது நல்லது எனத் தோன்றுகின்றது. நைதரசன் (அல்லது நைட்ரசன்) என்றே கூறலாம் என்ற கருத்து உள்ளது. நல்ல தமிழில் இவற்றை எல்லாம் அழைக்கலாம், இயலாது என்று அல்ல, ஆனால் "பொதுமை" கருதி நைட்ரசன் அலல்து நைதரசன் என்றே அழைக்கலாம் என்பது மற்றொரு கருத்து. தமிழ் விக்கிப்பீடியாவில் கூடியமட்டிலும் சீரான கலைச்சொல்லாட்சி இருப்பது நல்லது. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 01:51, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஐயா, பெயர்கள் தமிழில் இடப்பட்டவற்றிற்கு சொற்பிழையே, பொருட்பிழையோ இல்லையென நினைக்கிறேன். மேலும், நீங்கள் குறிப்பிட்டதுப்போல நைதரசன்/உப்பிறப்புவளி என மாற்றம் கொடுத்துள்ளேன். எனதுத் தாழ்மையானக் கருத்து ஒருச் சொல்லிற்குத் தமிழ்ப்பெயர்த் தென்பட்டால் அதனை நீங்கள் குறிப்பிட்டதுப் போல் பொதுமைப் பெயரையும் அதற்கு இணையான நன் தமிழ்ப் பெயரையும் சேர்த்து அதன் அருகிலேயேக் குறிப்பிட்டுவர காலத்தைக் கடந்தும் பதத்தை இட்டுச்செல்ல இயலும் என நினைக்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 13:37, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சிங்கமுகன். கட்டுரையில் மிகச்சிறு உரை தி. செய்துள்ளேன் (நைதரசன் என்றும்.. இன்னொரு இடத்தில் "அணுவும் அசையாது" என்னும் தொடரை நீக்கி இன்றியமையாதது என்று மாற்றியுள்ளேன்). மிக்க நன்றி. --செல்வா 04:33, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலைபாக்டீரியா&oldid=799740" இலிருந்து மீள்விக்கப்பட்டது